2 ஆவது பாகிஸ்தான் வீரராக பர்ஹான் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

Sahibzada Farhan
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடையவுள்ள வேளையில் இன்றைய 35-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் கொழும்பு நகரில் நடைபெற்ற வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

2 ஆவது பாகிஸ்தான் வீரராக பர்ஹான் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நமீபியா அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சாஹிப்சாதா ஃபார்ஹான் 58 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 100 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இரண்டாவது பாகிஸ்தான் வீரராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை டி20 உலக கோப்பை வரலாற்றில் சதமடித்த ஒரே ஒரு பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அகமது செஷாத் தன்வசம் வைத்திருந்தார். அவருக்கு அடுத்து தற்போது ஃபர்ஹான் இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2023 உலககோப்பை பைனல்ல அவர் விளையாடி இருந்தா இந்தியா ஜெயிச்சிருக்கும் – முகமது கைப் கருத்து

அது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 உலககோப்பை போட்டியில் சதமடித்த ஆறாவது ஆசிய வீரராகவும் இவர் தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் இலங்கை அணியை சேர்ந்த பதும் நிசாங்கா, கனடா அணியை சேர்ந்த யுவ்ராஜ் சாம்ரா ஆகியோரும் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement