2023 உலககோப்பை பைனல்ல அவர் விளையாடி இருந்தா இந்தியா ஜெயிச்சிருக்கும் – முகமது கைப் கருத்து

Mohammad Kaif
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது லீக் சுற்றில் இருந்து அரையிறுதி போட்டி வரை எந்த ஒரு போட்டியிலுமே தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி நிச்சயம் இந்த 2023 உலக கோப்பையையும் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் இருந்தது.

அவர் இருந்திருந்தா இந்தியா ஜெயிச்சிருக்கும் : முகமது கைப்

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியிருந்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணி 2011 போன்று கோப்பையை கைப்பற்றும் இன்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு ஹார்திக் பாண்டியா மட்டும் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா அணி அவ்ளோ பலமான அணி இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : 2023 ஒருநாள் உலக கோப்பை வென்ற பிறகு ஆஸ்திரேலியா அணி வலிமையான அணி என்று சொல்லப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட கரியரே மாறுனதுக்கு அந்த ஒரு மேட்ச் தான் காரணம்.. 10 ஆண்டு நினைவை பகிர்ந்த – ஹார்டிக் பாண்டியா

ஆனால் அதன்பிறகு நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அடுத்தடுத்த தொடர்களை இழந்தது. அவர்கள் உண்மையிலேயே வலிமையான அணி இல்லை. 2023 இறுதிப் போட்டியில் பாண்டியா இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என கைப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement