இந்தியாவை தாண்டாம உங்களால் இந்த டி20 வேர்ல்டுகப்பை ஜெயிக்க முடியாது – டேரன் சமி ஓபன்டாக்

Darren Sammy
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாகலமாக துவங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய அணியை வீழ்த்தாமல் எதுவும் நடக்காது : டேரன் சமி

மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ளது. அதோடு சொந்த மண்ணிலும் இந்திய அணி விளையாட இருப்பதால் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகளவில் இருக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேரன் சமி இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டி20 உலக கோப்பையை வெல்ல எந்த அணி நினைத்தாலும் முதலில் இந்திய அணியை தாண்டியாக வேண்டும்.

இந்திய அணியை வீழ்த்தாமல் இந்த தொடரை எந்த ஒரு அணியாலும் கைப்பற்ற முடியாது என்பதுதான் உண்மை. எந்த போட்டியாக இருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே கோப்பையை கைப்பற்ற முடியும். தற்போதைய இந்திய அணி பயமின்றி விளையாடிய வருவதால் அவர்களை வீழ்த்துவது நிச்சயம் கடினமாகவே இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணி வெற்றிபெற வேண்டுமென மிகப்பெரிய செயலை செய்து நெகிழவைத்த – ஸ்மிருதி மந்தனா

10 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்களும் இந்திய அணியை வீழ்த்திய பின்னரே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தோம் என டேரன் சமி கூறியது குறிப்பிடத்தக்கது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று அமெரிக்கா அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement