சரியான நேரத்தில் பவரை காட்டனும்.. டி20 உலககோப்பை தொடருக்கு முன்னர் – சவுரவ் கங்குலி அறிவுரை

Sourav Ganguly
- Advertisement -

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க காத்திருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட காத்திருக்கின்றன.

இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய : சவுரவ் கங்குலி

இதன் காரணமாக இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருப்பதால் நிச்சயம் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

அதேபோன்று இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும்? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது அறிவுரைகளை தொடர்ந்து வழங்கிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நம்முடைய இந்திய டி20 அணி மிகச் சிறப்பான அணி எனவே நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய அணியாக நான் பார்க்கிறேன். தற்போதைய அணியில் மிகவும் வலிமையான வீரர்கள் நிறைந்து இருக்கின்றனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. தரமான இளமையான வீரர்கள் நம்மிடம் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக திலக் வர்மா விடயத்தில் வெளியான நற்செய்தி – விவரம் இதோ

என்னதான் இருந்தாலும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் முக்கிய விஷயம் என்னவென்றால் தொடரின் சரியான நேரத்தில் நாம் மிகச் சிறப்பான உச்சத்தை அடைந்து போட்டியில் வெல்வது தான் முக்கியம். கடந்த கால வெற்றிகளில் எந்த அர்த்தமும் கிடையாது. எனவே ஏற்கனவே கோப்பையை வென்றதை மறந்து மீண்டும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்புடன் விளையாட வேண்டும் என கங்குலி அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement