டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக திலக் வர்மா விடயத்தில் வெளியான நற்செய்தி – விவரம் இதோ

Tilak Varma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா இந்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முற்றிலுமாக தவறவிட்டார். எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் இவருக்கு ஏற்பட்ட காயம் அனைவரது மத்தியிலும் கவலையை அளித்திருந்தது.

திலக் வர்மா விடயத்தில் வெளியான நற்செய்தி :

ஏனெனில் ஆசிய கோப்பை தொடரின் போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரிலும் மிக முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார்.

- Advertisement -

எனவே அவருக்கு ஏற்பட்ட காயம் பலரது மத்தியிலும் வருத்தத்தை அளித்திருந்தது. விஜய் ஹசாரே தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சையை மேற்கொண்ட அவர் பயிற்சியை மெல்ல மெல்ல துவங்கி இருந்தாலும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இந்திய அணியுடன் இணைவாரா? என்ற கேள்வியும் பலரது மத்தியிலும் எழுந்திருந்தது.

இந்நிலையில் திலக் வர்மா விடயத்தில் ஒரு நற்செய்தியை தேசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த திலக் வர்மா வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் செய்துள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் உடற்பயிற்சி செய்வது குறித்தும், பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையான பயிற்சிகள் எடுப்பது குறித்தும் ஒரு வீடியோவினையும் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சொந்த ஊரில் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு.. இதுலயும் சொதப்புனா அவ்ளோதான் – சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இதன்மூலம் திலக் வர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சி போட்டியிலேயே அவர் இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement