சொந்த ஊரில் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு.. இதுலயும் சொதப்புனா அவ்ளோதான் – சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Sanju Samson
- Advertisement -

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சனுக்கு தற்போது ஒரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே சுப்மன் கில் இந்திய டி20 அணியின் துவக்க வீரராக கம்பேக் கொடுத்த பிறகு வாய்ப்பிழந்த சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம் என்று பேசப்பட்ட வேளையில் தனது தொடர்ச்சியான மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக சுப்மன் கில் டி20 அணியில் தனது வாய்ப்பை இழந்தார்.

சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை :

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தற்போது அபிஷேக் சர்மாவுடன் மீண்டும் துவக்க வீரராக விளையாடி வருகிறார். ஏற்கனவே அபிஷேக் சர்மாவுடன் இணைந்து மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவரது ஆட்டம் படுமோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நான்கு ஆட்டங்களிலும் சேர்த்து அவர் வெறும் 40 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக அவர் டி20 உலக கோப்பை தொடரின் போது பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 அணிக்கு கம்பேக் கொடுத்திருந்த இஷான் கிஷன் நியூசிலாந்து தொடரில் அசித்தி வருகிறார்.

இவ்வேளையில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் கவலைக்கிடமாக இருக்கிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு இஷான் கிஷனை விளையாட வைக்க வேண்டும் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு கடைசி வாய்ப்பாக இன்று ஜனவரி 31-ஆம் தேதி அவரது சொந்த ஊரில் நடைபெற இருக்கும் போட்டி கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா வெறும் காட்டு அடி அடிக்குறவர் மட்டுமல்ல.. அவர் புத்திசாலித்தனமான வீரர் – பேட்டிங் கோச் பேட்டி

திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் இந்த ஐந்தாவது டி20 போட்டியில் அவர் மீண்டும் பேட்டிங் பார்முக்கு வந்து அசத்தினால் டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார். இல்லையெனில் அவர் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement