அபிஷேக் சர்மா வெறும் காட்டு அடி அடிக்குறவர் மட்டுமல்ல.. அவர் புத்திசாலித்தனமான வீரர் – பேட்டிங் கோச் பேட்டி

Kotak and Abhishek
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டி20 போட்டிகளுக்கான துவக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வருகிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருகிறார். அதோடு எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடர்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராகவும் இடம் பெற்றிருக்கிறார்.

அபிஷேக் சர்மா ஒரு புத்திசாலித்தனமான வீரர் : பேட்டிங் கோச் பேட்டி

இவ்வேளையில் அவர் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியின் போது 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த அதிரடியான ஆட்டத்தை பார்த்த நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரும் அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த எங்களிடம் சரியான திட்டம் இல்லை என்கிற அளவிற்கு அவரது பேட்டிங்கை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்நிலையில் அபிஷேக் ஷர்மா வெறும் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் மட்டுமல்ல என்றும் அவர் ஒரு புத்திசாலித்தனமான வீரர் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோட்டக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் ஷர்மா அனைத்து பந்துகளையும் அடித்து ஆடும் வீரர் மட்டும் என்று நினைக்காதீர்கள். ஏனெனில் அவர் பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாடக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான வீரர். அவர் அதிரடியான வீரர் தான் ஆனாலும் அவர் பந்துகளுக்கு ஏற்றவாறு சரியான இடத்தில் அடிப்பதனால் அவரால் விரைவாக ரன்களை குவிக்க முடிகிறது. அவர் ஒரு ஃகிளவர் பேட்ஸ்மேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது இந்திய வீரராக இன்று கேப்டன் சூரியகுமார் யாதவ் நிகழ்த்த காத்திருக்கும் – அசத்தல் சாதனை

நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது போட்டியின் போது மைதானத்தில் இருந்த பெரிய இடைவெளிகளை குறிவைத்து அடித்தார். மூன்றாவது போட்டியின் போது ஆப் சைடில் அதிகமாக அடித்தார். இப்படி எந்த இடத்தில் அடித்தால் சரியாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றார் போல் புத்திசாலித்தனமாக விளையாடுவதாக அவர் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement