சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்ட வேளையில் முதல் நான்கு போட்டியின் முடிவிலேயே மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி விட்டது.
சூரியகுமார் யாதவ் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஜனவரி 31-ஆம் தேதியான இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பை தொடருக்கு தன்னம்பிக்கையுடன் செல்ல வேண்டும் என்று இரு அணி வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டுவார்கள் என்பது உறுதி.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரராக ஒரு முக்கிய மைல்கல் சாதனையை நோக்கி காத்திருக்கிறார்.
அது குறித்த விவரமும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 103 போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 23 அரைசதம் என 2967 ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க : 2 முக்கிய மாற்றங்கள்.. 5 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
இந்நிலையில் இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் மேலும் அவர் 33 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 3000 ரன்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



