இப்படி யாரும் விளையாடி நான் பாத்ததில்ல.. இஷான் கிஷனின் ஆட்டத்தை பாராட்டிய – சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 209 ரன்கள் என்கிற பிரம்மாண்டன் இலக்கை 15.2 ஓவரிலேயே துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இஷான் கிஷனின் ஆட்டத்தை பாராட்டிய : சூரியகுமார் யாதவ்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 209 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 82 ரன்களையும், இஷான் கிஷன் 76 ரன்களையும் குவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த வேளையில் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.

அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து இஷான் கிஷனின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இன்றைய போட்டிக்கு முன்னர் இஷான் கிஷன் எவ்வாறு தயாரானார்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2 நாளில் அபிஷேக் சர்மாவின் சாதனையை காலி செய்த இஷான் கிஷன் – விவரம் இதோ

பவர்பிளே ஓவருக்குள் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தபோதும் பவர்பிளே முடியும்போது 75 ரன்கள் கொண்டு வந்த விதத்தில் இப்படி யாரும் விளையாடி நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இஷான் கிஷனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இதுபோன்ற ஆட்டத்தை நான் அருகில் இருந்து பார்த்ததில் மகிழ்ச்சி என்றும் சூரியகுமார் யாதவ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement