இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பலமான முன்னிலை பெற்றுள்ளது.
அபிஷேக் சர்மாவின் சாதனையை காலி செய்த இஷான் கிஷன் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 82 ரன்களையும், இஷான் கிஷன் 76 ரன்களையும் குவித்தனர். குறிப்பாக இஷான் கிஷன் 32 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 76 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதனால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மாவின் சாதனை ஒன்றினையும் அவர் முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ
கடந்த முதலாவது டி20 போட்டியின் போது 22 பந்துகளில் அபிஷேக் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிராக அரை சதம் கடந்திருந்தார். இந்நிலையில் அந்த போட்டி முடிந்த 2 நாளில் தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மாவிடம் இருந்து பறித்தது குறிப்பிடத்தக்கது.



