இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
2 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 23-ஆம் தேதியான இன்று ராய்ப்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருப்பதாக சூரியகுமார் யாதவ் அறிவித்தார். அந்த வகையில் கடந்த முதலாவது போட்டியில் விளையாடியிருந்த அக்சர் பட்டேல் மற்றும் பும்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்.
மற்றபடி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரியளவு மாற்றம் எதுவும் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்க முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இஷான் கிஷன் வேணாம்.. திலக் வர்மாவின் இடத்தில் இவரை விளையாட வையுங்க – வருண் ஆரோன் கருத்து
1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) ஹர்ஷித் ராணா, 9) அர்ஷ்தீப் சிங், 10) குல்தீப் யாதவ், 11) வருண் சக்கரவர்த்தி.



