இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அக்சர் படேலுக்கு மாற்றுவீரர் இவர்தான் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 23-ஆம் தேதியான இன்று ராய்ப்பூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான அக்சர் பட்டேல் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது பந்தினை தடுக்க நினைத்து கையில் காயம் அடைந்தார். அப்படி அவருக்கு கையில் ஏற்பட்ட காயம் ரத்தக்கசிவு வரை சென்றதால் அவர் அந்த முதலாவது போட்டியில் மீண்டும் பீல்டிங் செய்ய களத்திற்கு வராமல் ஓய்வறையிலேயே இருந்தார்.
இதன் காரணமாக தற்போது இந்த இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னர் அவர் முழு உடற்தகுதியை எட்டி விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அதே காயத்துடன் அவர் தொடர்ந்து பந்து வீசினால் மேலும் காயம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக அவருக்கு இந்த இரண்டாவது போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க : 10 ஆண்டுகளை பூர்த்தி செய்த ஜஸ்ப்ரீத் பும்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு – விவரம் இதோ
அப்படி ஒருவேளை இந்த இரண்டாவது போட்டியை அக்சர் படேல் தவறவிடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம் பெறவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு பலத்தையே சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



