1 விக்கெட் போதும்.. ஜடேஜாவை பற்றி கவலைப்படாதீங்க.. இதனால தோற்ற இந்தியா கம்பேக் தரும்.. சிராஜ்

Mohammed Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்களை நியூஸிலாந்து 47.3 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து எளிதாக வெற்றி பெற்றது.

அந்தளவுக்கு இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் ஒரு விக்கெட்டை கூட எடுக்காதது தோல்விக்கு வித்திட்டது. சொல்லப்போனால் டேரில் மிட்சேல் கொடுத்த கேட்ச்சை பிரசித் கிருஷ்ணா கோட்டை விட்டதால் குல்தீப் யாதவுக்கு கிடைக்க வேண்டிய விக்கெட் பறிபோனது.

- Advertisement -

கவலை வேண்டாம்:

ஆனால் அவரைக் காட்டிலும் அனுபவமிக்க ரவீந்திர ஜடேஜா மிகவும் மோசமாக பந்து வீசியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. எனவே அவரை அணியிலிருந்து கழற்றி விட்டு அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ராஜ்கோட்டில் முக்கிய நேரத்தில் பிரசித் கிருஷ்ணா கேட்ச்சை தவற விட்டதே இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

எனவே 3வது போட்டியில் இந்தியா கம்பேக் கொடுத்து வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் ரவீந்திர ஜடேஜாவின் ஃபார்ம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவின் ஃபார்ம் பற்றி கவலைப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. அது ஒரு விக்கெட்டை பொறுத்தது. நீங்கள் ஒரு விக்கெட்டை எடுத்து விட்டால் புதிய தன்னம்பிக்கையுடன் வித்தியாசமாக பவுலிங் செய்வதைப் பார்க்க முடியும்”

- Advertisement -

இந்தியா கம்பேக் தரும்:

“கடந்த போட்டியில் வெற்றிக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் அப்போது நாங்கள் கேட்ச்சை தவற விட்டோம். ஒருவேளை நாங்கள் அதை பிடித்திருந்தால் முடிவு வித்தியாசமாக இருந்திருக்கும். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அதிக வாய்ப்புகளை தர மாட்டார்கள். எனவே நீங்கள் கேட்ச்சை தவற விடும் போது அதற்கான பரிசை அவர்கள் தருவார்கள். மிட்சேலை அவுட்டாக்க மிடில் ஓவர்களில் நாங்கள் எங்களது திட்டங்களுடன் சிறந்த முயற்சிகளை போட்டோம்”

இதையும் படிங்க: இதுவே விராட் கோலி கேட்ருந்தா.. ஸ்மித்தின் அப்பா கூட அதை மறுத்திருக்க மாட்டாரு.. பசித் அலி ஓப்பன்டாக்

“ஆனால் நாங்கள் அந்த ஒரு வாய்ப்பை எடுக்க வேண்டியிருந்தது. ஒருவேளை அந்த விக்கெட்டை எடுத்திருந்தால் வெற்றி வித்தியாசமாக அமைந்திருக்கும். அதையும் தாண்டி எங்களுடைய அணியின் சூழல் நன்றாக இருக்கிறது. சீனியர்களிடமிருந்து வலுவான உள்ளீடுகள் இருக்கிறது. வெற்றி தோல்விகள் விளையாட்டில் சகஜம். ஆனால் பெரிய தொடருக்காக தயாராகும் எங்களுடைய அணியின் சூழல் நன்றாகவே இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement