பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அஃப்ரிடி உலகின் மிகச்சிறந்த வீரர்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமாகும். குறிப்பாக இந்தியாவின் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ராவை விட பாபர் அசாம், அஃப்ரிடி சிறந்தவர்கள் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட ஆகாய சூர வீரர்கள் சுமாராக விளையாடியதால் பாகிஸ்தான் பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மூவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2025/26 பிக்பேஷ் தொடரில் விளையாடுகிறார்கள். ஆனால் அங்கே அவர்களுடைய உண்மையான திறமை அம்பலப்பட்டதால் ஒவ்வொருவராக அவமானத்தை சந்தித்தனர். அதைப் பற்றிய விபரத்தை பார்ப்போம். முதலாவதாக பாகிஸ்தானின் கழுகு என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடும் ஷாஹீன் அஃப்ரிடி பிரிஸ்பேன் அணிக்காக விளையாடினார்.
பாகிஸ்தானின் சூரர்களுக்கு:
அந்த வாய்ப்பில் மெல்போர்ன் அணிக்கு எதிரான போட்டியில் 18வது ஓவரை வீசிய அவர் இடுப்புக்கு மேலே 2 நோபால் பந்துகளை போட்டார். அதனால் “நீங்கள் பந்து வீசியது போதும் வெளியேறுங்கள்” என்று நடுவர் அவரை போட்டியிலிருந்து வெளியேற்றினார். ஏனெனில் ஒரு ஓவரில் இடுப்புக்கு மேலே 2 நோபால் போடும் பவுலர் மேற்கொண்டு பந்து வீச முடியாது என்பது அடிப்படை விதிமுறையாகும்.
அதனால் ஏற்கனவே அப்போட்டியில் 2.4 ஓவரில் 43 ரன்களை வாரி வழங்கிய அஃப்ரிடி ஒழுங்காக பந்து வீசத் தெரியாமல் அவமானத்துடன் வெளியேறினார். அடுத்ததாக பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் இத்தொடரில் ஆரம்பம் முதலே மெல்போர்ன் அணிக்காக அதிரடியாக விளையாட தடுமாறினார். அதன் உச்சமாக சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் அவர் 26 (23) ரன்களை 113 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து திண்டாட்டமாக விளையாடினார்.
ஆஸ்திரேலியாவில் அவமானம்:
அதைப் பார்த்து கடுப்பான மெல்போர்ன் கேப்டன் “நீங்கள் விளையாடியது போதும், வெளியே வாருங்கள்” என்று சொல்லி ரிஸ்வானை ரிட்டயர்ட் அவுட்டாக்கி களத்திலிருந்து வெளியேற்றினார். அதன் வாயிலாக பிக்பேஷ் தொடரில் ரிட்டயர்ட் அவுட்டான முதல் வெளிநாட்டு வீரர் என்ற அவமானமான சாதனையுடன் ரிஸ்வான் வெளியேறினார். அடுத்ததாக நேற்று நடைபெற்ற சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் எக்ஸ்பிரஸ் நேரத்தில் விளையாடி 100 (42) ரன்களை விளாசி வெற்றியில் பங்கற்றினார்.
மறுபுறம் இத்தொடரில் ஆரம்பம் முதலே மெதுவாக விளையாடி வந்த பாபர் அசாம் அப்போட்டியிலும் தடுமாற்றமாகவே விளையாடினார். அந்த சூழ்நிலையில் பிக்பேஷ் தொடரில் 12வது ஓவருக்கு பவர்சர்ஜ் என்ற ஸ்பெஷல் இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதற்காக 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை எடுக்காத ஸ்மித் அடுத்த ஓவரை எதிர்கொள்வதற்காக ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: இதை செஞ்சு பாபர் அசாமை வெச்சு ஜெய்க்க பாத்தோம்.. ஆனா ஸ்மித் கெடுத்துட்டாரு.. க்ரீன் பேட்டி
குறிப்பாக பாபர் அசாமால் அதிரடியாக அடிக்க முடியாது என்று கருதிய ஸ்மித் 12வது ஓவரில் நினைத்தபடியே 30 ரன்கள் விளாசி தம்முடைய முடிவை சரியென்று நிரூபித்தார். மறுபுறம் அதற்காக அதிருப்தியை வெளிப்படுத்திய பாபர் அடுத்த ஓவரிலேயே 47 (39) ரன்னில் கிளீன் போல்ட்டானார். அதனால் கோபமடைந்த அவர் வெளியேறும் முன் பவுண்டரி எல்லையை பேட்டால் அடித்து விட்டு சென்றார். மொத்தத்தில் உங்களால் அதிரடியாக விளையாட முடியாது என்று ஸ்மித் நினைக்கும் அளவுக்கு பாபர் அசாம் அவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



