டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த – மிட்சல் ஸ்டார்க்

Starc and Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அஷ்வின் சாதனையை தகர்த்த மிட்சல் ஸ்டார்க் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 384 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்களையும், ஹாரி புரூக் 84 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ்ஸை அதிக முறை வீழ்த்திய வீரராக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 13 முறை அவரை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பென் ஸ்டாக்ஸை மிட்சல் ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்க விடாமல் டக் அவுட்டாகியிருந்தார். இதன்மூலம் 14வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ்ஸை அவர் ஆட்டமிழக்க வைத்துள்ளார். இதன் மூலம் அதிகமுறை பென் ஸ்டோக்சை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 160 ரன்ஸ்.. சச்சின் உலக சாதனைக்கு ஆபத்தாகும் ஜோ ரூட்.. பாண்டிங்கின் வாழ்நாள் சாதனை சமன்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை இதுவரை 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மிட்சல் ஸ்டார்க் இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement