ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ரசிகருக்கு ஜாக்பாட் பரிசு இத்தனை கோடியா.. தெ.ஆ வாரியம் கலக்கல் அறிவிப்பு

Crowd Catch
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 2025 கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் எம்ஐ கேப்டவுன் – டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதின. கேப்டவுனில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 232/5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 40 (25), டேவோன் கான்வே 64 (33) ரன்களை குவித்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். மிடில் ஆர்டரில் ஜோஸ் பட்லர் 20 (12), ஹென்றிச் க்ளாஸென் 22 (14) ரன்கள் அடித்து அசத்தினார்கள். கடைசியில் கேப்டன் ஐடன் மார்க்கம் 35 (17), எவன் ஜோன்ஸ் 33* (14), டேவிட் வீஸ் 9* (5) ரன்களை அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள்.

- Advertisement -

ரசிகர்களுக்கு பரிசு:

கேப்டவுன் அணிக்கு அதிகபட்சமாக ஜார்ஜ் லின்டே 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய கேப்டவுன் அணிக்கு வேன் டெர் டுஷன் 2 ரன்னில் அவுட்டானாலும் ரியன் ரிக்கல்டன் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார். அடுத்து வந்த ரிசா ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (21) ரன்னில் அவுட்டானர்.

இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ரிக்கல்டன் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அப்போது மாபாக்கா வீசிய 13வது ஓவரின் 4வது பந்தை லெக் சைட் திசையில் சுழற்றி அடித்த அவர் மெகா சிக்சரை பறக்க விட்டார். அதை ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் லாவகமாக ஒற்றைக் கையில் பிடித்து ஆச்சரியப்படுத்தினார். அவரை அருகில் இருந்த ரசிகர்கள் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தி பாராட்டினார்கள்.

- Advertisement -

புதிய அறிவிப்பு:

ஏனெனில் 2025 எஸ்ஏ20 தொடரில் ரசிகர்கள் கூட்டத்தில் ஒற்றைக் கையில் தெளிவாக கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு 2 மில்லியன் பரிசாக கொடுக்கப்படும் என்று தென்னாப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது. அந்த திட்டம் ரசிகர்களை ஈர்க்கும் நோகத்தில் “கேட்ச் 2 மில்லியன்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி ஒற்றைக் கையில் தெளிவான கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு தொடரின் முடிவில் இந்திய ரூபாயில் 1.08 கோடி பகிர்ந்து கொடுக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியில் அவங்க ரெண்டு பேருக்கு கீழ் விளையாடியதில் மகிழ்ச்சி – பாப் டூபிளெஸ்ஸிஸ்

அப்படிப்பட்ட வாய்ப்பை முதல் போட்டியிலேயே அந்த ரசிகருக்கு வழங்கிய ரிக்கல்டன் 5 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 113 (63) ரன்களை விளாசி அசத்தினார். ஆனால் மிடில் ஆர்டரில் ஜேசன் ஸ்மித் 41 (14), நிக்கோலஸ் பூரான் 15 (10) ரன்கள் எடுத்ததைத் தவிர்த்து மற்றவர்கள் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் 20 ஓவரில் கேப்டவுனை 217/7 ரன்களுக்கு சுருட்டிய டர்பன் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஈதன் போஸ்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement