ஏலத்தில் எடுத்தது சரி தான்.. ஆனா வெங்கடேஷ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு இருக்குமா? – கும்ப்ளே கேள்வி

Kumble and Venky
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு ஒரு முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விராட் கோலியின் கனவும் நினைவாகி இருந்தது.

வெங்கடேஷ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? : கும்ப்ளே கேள்வி

இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மேலும் அணிக்கு தேவையான சில முக்கிய வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்தியுள்ளதால் நடப்பு சாம்பியனாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஆர்.சி.பி அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என்பதே பலரது நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஆர்.சி.பி அணிக்கு சில முக்கிய வீரர்கள் மினி ஏலத்தின் போது வாங்கப்பட்ட வேளையில் கொல்கத்தா அணி வெளியேற்றியிருந்த வெங்கடேஷ் ஐயரை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியிருந்தது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயரை வாங்கியது சரிதான் என்றாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் ஆரம்ப கட்ட போட்டிகளின் போது இடம் கிடைக்காது என முன்னாள் ஆர்.சி.பி கேப்டனான அனில் கும்ப்ளே சில விஷயங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஆர்சிபி அணி வெங்கடேஷ் ஐயரை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது சரியான ஒன்றுதான் அவர் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஆரம்பகட்ட போட்டிகளில் இடம் பெறுவது சந்தேகம் என்று கூறுவேன். ஏனெனில் ஆர்.சி.பி தற்போது சாம்பியன் அணி. கோப்பையை வென்ற அணியில் இருக்கும் கூட்டணியை எந்த அணியும் அவ்வளவு சீக்கிரம் மாற்ற விரும்பாது.

இதையும் படிங்க : ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

எனவே ஆரம்ப கட்ட போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவரது திறமையை ரஜத் பட்டிதார் நன்கு அறிவார் என்பதனால் அவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது கேப்டனுக்கு தெரியும் என்றும் அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement