47.3 ஓவரில் 413 ரன்ஸ்.. தெ.ஆ போல 2வது உலக சாதனை படைத்த கர்நாடகா.. ஜார்கண்டுக்கு மாஸ் பதிலடி

Karnataka
- Advertisement -

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவக்கியது. அந்தத் தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இருக்கும் ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா அணிகள் மோதிய போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 50 ஓவரில் அதிரடியாக விளையாடி 412/9 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக 33 பந்துகளில் சதமடித்த கேப்டன் இசான் கிசான் 125 (39) ரன்களை 320.51 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். அவருடன் விராட் சிங் 88, குமார் குசக்ரா 63 ரன்கள் எடுத்த நிலையில் கர்நாடகாவுக்கு அதிகபட்சமாக அபிலாஷ் செட்டி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

கர்நாடகா பதிலடி:

அடுத்ததாக 413 என்ற இமாலய இலக்கைத் துரத்திய கர்நாடகா அணிக்கு தேவ்தூத் படிக்கல் படிக்கல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த மயங் அகர்வால் 10 பௌண்டரியுடன் அரை சதமடித்து 54 (34) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய படிக்கல் சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

எதிர்ப்புறம் வந்த கருண் நாயர் 29 (27), ஸ்மாரன் ரவிச்சந்திரன் 27 (21) ரன்கள் அடித்து அதிரடியாக விளையாட முயற்சித்து பெவிலியன் திரும்பினார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய படிக்கல் சதமடித்து கர்நாடகா வெற்றிக்கு போராடினார். அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த கிருஷ்ணன் ஸ்ரீஜித் தமது பங்கிற்கு 38 (32) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

2வது உலக சாதனை:

மறுபுறம் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 10 பவுண்டரி 7 சிக்ஸருடன் 147 (118) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் டெத் ஓவர்களில் மிரட்டலாக விளையாடிய அபினவ் மனோகர் அதிரடியான அரை சதமடித்து 56* (32) ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய துருவ் பிரபாகர் தமது பங்கிற்கு 40* (22) ரன்கள் அடித்தார். அதனால் 47.3 ஓவரிலேயே 413/5 ரன்களை குவித்த கர்நாடகா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜார்கண்டுக்கு மாஸ் பதிலடி கொடுத்தது.

இதையும் படிங்க: அதுக்காக பண்ட், பும்ரா என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க.. அவங்க வேணும்ன்னு பண்ணல.. பவுமா பேட்டி

இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து கர்நாடகா உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2014ஆம் ஆண்டு வடக்கு சிட்னியில் நடைபெற்ற டாஸ்மானியாவுக்கு எதிரான போட்டியில் குயின்ஸ்லாந்து 399 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனை. அந்த உலக சாதனை பட்டியலில் 2006ஆம் ஆண்டு ஜோஹன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 435 ரன்களை சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மட்டுமே 400+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement