கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததால் இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
சூரியகுமார் யாதவுக்கு அடுத்து இவர்தான் கேப்டன் :
அவரது தலைமையின் கீழ் மிகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியானது தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் இந்திய அணி நிச்சயம் இந்த தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்றும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு 2026 டி20 கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வேளையில் அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடர் தான் சூரியகுமார் யாதவுக்கு கேப்டனாக கடைசி தொடர் என்றும் நிச்சயம் அந்த தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள இருப்பதாகவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
ஏனெனில் தற்போது 35 வயதை எட்டியுள்ள சூரியகுமார் யாதவ் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதினால் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரே அவருக்கு கடைசி கேப்டன்சி தொடராக இருக்கும் இதன் காரணமாக அடுத்த புதிய டி20 கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அப்படி புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இருப்பதாக பலரும் பேசி வந்த வேளையில் தற்போது சுப்மன் கில்லை தாண்டி ஹார்டிக் பாண்டியா அந்த இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் மோசமான பேட்டிங் காரணமாக டி20 போட்டிகளில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்ட வேளையில் ஹார்டிக் பாண்டியா டி20 போட்டிகளில் முக்கிய வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க : 47.3 ஓவரில் 413 ரன்ஸ்.. தெ.ஆ போல 2வது உலக சாதனை படைத்த கர்நாடகா.. ஜார்கண்டுக்கு மாஸ் பதிலடி
பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹார்டிக் பாண்டியா அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய அணியை வழி நடத்த முடியும் என்பதனால் அடுத்த டி20 கேப்டனாக அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



