இங்கிலாந்தை பாத்து சிரிக்கிறாங்க.. இனிமேல் இந்த 16 வருட அவமானத்தை ஆச்சும் உடைங்க.. வாகன் கோரிக்கை

Micheal Vaughan
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கோப்பையை 3 – 0* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. மறுபுறம் கடைசியாக 2010/11 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா மண்ணில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் தொடர்ந்து 15வது வருடமாக ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் கோப்பையை வெல்ல முடியாமல் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது.

சொல்லப்போனால் 2010/11க்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து திண்டாடி வருகிறது. கடந்த 15 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் 15 தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து 2 போட்டிகளை ட்ரா செய்தது. இத்தனைக்கும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் வெல்வோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் சவால் விடுத்தனர்.

- Advertisement -

எல்லாம் சிரிக்குறாங்க:

ஆனால் அதற்கு தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து வெறும் 11 நாட்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் பஸ்பால் அணுகுமுறையை பார்த்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட எதிரணிகள் சிரிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் வேதனையுடன் விமர்சித்துள்ளார். தற்போதைய நிலைமையில் எஞ்சிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்று குறைந்தபட்சம் ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியை தவிர்க்குமாறு அவர் இங்கிலாந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றி மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “இந்த ஆஷஸ் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்தின் மொத்த அணுகுமுறையும் மோசமாக வெளிப்பட்டுள்ளது. இது போன்ற தோல்விகளுக்குப்பின் தலைகள் உருளும் என்பதை என்பதை அறிய நீங்கள் வரலாற்றை அதிகம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் வெறும் 11 நாட்களுக்குள் கிடைத்துள்ள இத்தோல்வி ஆஸ்திரேலியாவில் நாம் சந்தித்ததிலேயே மிகவும் மோசமான ஒன்றாகும்”

- Advertisement -

வாகன் கோரிக்கை:

“இங்கிலாந்து அணி கடந்த 3 வருடங்களில் விளையாடிய விதத்தை வைத்து ஒரு ஆணவத்தைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். இந்த அணிக்கு எவ்வளவு பலவீனமான தரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. தற்போதைய நிலையில் ஆஷஸ் கோப்பை சென்றிருக்கலாம், தொடர் இன்னும் முடியவில்லை என்பதையே நான் சொல்வேன். இனிமேல் ஒவ்வொரு இங்கிலாந்து வீரரும் தாங்கள் தோல்வியடையாமல் இருக்க போராட வேண்டும்”

இதையும் படிங்க: 25 வருட தோல்வியிலிருந்து இந்தியாவை கம்பேக் கொடுக்க வைத்த.. விராட், ரோஹித் 2027க்கு வேணும்.. மிஸ்ரா பேட்டி

“தற்போதைய அணியிலிருந்து சிலர் வெளியேறினாலும் பலர் இன்னும் முதலீடு செய்யத் தகுதியானவர்கள். ஒருவேளை புதிய வீரர்களைக் கொண்டு வந்தால் அவர்களும் அடுத்த 4 வருடத்தில் அடி வாங்குவார்கள். இப்போதைய நிலையில் கடைசி 2 போட்டிகளை சம்பிரதாயத்துக்காக விளையாடாதீர்கள் என்பதே இங்கிலாந்துக்கு என்னுடைய செய்தியாகும். இங்கே இங்கிலாந்து கடந்த 16 வருடங்களாக வெற்றி பெறவில்லை. எனவே ஒரு வெற்றி என்பதே பெரியதாகும். அதை 2003, 2005இல் நான் அனுபவித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement