இந்தியாவை பாத்து பாகிஸ்தான் அணியை உருவாக்க முயற்சிக்கிறேன்.. செலெக்டர் ஜாவேத் ஓப்பன்டாக்

Aqib Javed
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடி வருகின்றது. குறிப்பாக 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்து பாகிஸ்தான் அசத்தியது. ஆனால் அப்போதிலிருந்து இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்தது.

குறிப்பாக கடந்த 2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது. இது மட்டுமின்றி 2022, 2024 டி20 உலகக் கோப்பைகளில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா ஆகிய கத்துக்குட்டி அணிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் மற்றொரு அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

இந்தியாவை பார்த்து:

அப்படி ஒவ்வொரு முறையும் தோல்விகளை சந்திக்கும் போது பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய தேர்வுக்குழு மற்றும் கேப்டனை அதிரடியாக மாற்றியது. அதே போல ஜேசன் கில்லஸ்பி, 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய கேரி கிரிஸ்டன் ஆகியோரையும் பயிற்சியாளராக நியமித்தது. இருப்பினும் திறமையில் பஞ்சத்தைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி பெரும்பாலான தொடர்களில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவை பார்த்து தரமான வீரர்களை கண்டறிந்து திட்டமிட்டு பாகிஸ்தான் அணியை உருவாக்க உள்ளதாக ஆகிப் ஜாவேத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் முன்னாள் வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முன்னேற்றத்திற்காக நான் இந்தியாவின் வெற்றிகளைப் பார்த்து திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறேன்”

- Advertisement -

செலக்டர் வெளிப்படை:

“எந்த அணியும் தங்களுடைய திறமையை வைத்தே வெற்றிகரமாக செயல்பட முடியும். நீங்கள் கேப்டனாக, பயிற்சியாளராக, தேர்வாளராக யாரை நியமித்தாலும் திறமை இல்லையென்றால் வெல்ல முடியாது. திறமையின் தரத்தை பெஞ்சில் உள்ள வீரர்களின் பலத்தை அதிகரிப்பதாலேயே உறுதி செய்ய முடியும். அது முறையான உள்கட்டமைப்பு மற்றும் சிஸ்டத்தால் மட்டுமே சாத்தியமாகும்”

இதையும் படிங்க: வம்பிழுத்த பாக் பவுலருக்கு பதிலடி கொடுத்த சூர்யவன்சி.. ஆனால் இந்தியாவுக்கு நேர்ந்த சோகம்

“அதற்கான அறிகுறிகள் நம்மிடம் காணப்படுகிறது. நம்மிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் விளையாடும் போது பாகிஸ்தான் அணியை பற்றி நான் வித்தியாசமாக சிந்திப்பேன். ஆனால் தற்போதைய அணி சிறப்பாக விளையாடுவதற்கு இதுவே நல்ல வாய்ப்பாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை காரணமாக 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement