ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளது அனைவரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வரும் அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
இருப்பினும் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியை விட யாரும் பெரியது கிடையாது என்பதால் மோசமான ஃபார்மில் இருக்கும் கில்லை கழற்றி விட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதே போல கடைசி நேரத்தில் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
10க்கு 10 மதிப்பெண்கள்:
சயீத் முஸ்டாக் அலி 2025 கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த அவர் ஜார்க்கண்ட் முதல் முறையாக கோப்பையை வெல்ல உதவினார். எனவே ஃபார்முக்கு திரும்பிய அவரை பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்த அகர்கர் அதற்காக ஜிதேஷ் சர்மாவை கழற்றி வைத்துள்ளார். அத்துடன் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஃபினிஷிங் செய்யக்கூடிய ரிங்கு சிங்கை அவர் கடைசி நேரத்தில் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்நிலையில் குறை சொல்ல முடியாத அளவுக்கு 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியை அகர்கர் தேர்ந்தெடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இப்படிப்பட்ட தேர்வை செய்ததற்காக அஜித் அகர்கர் மற்றும் அணி நிர்வாகத்திற்கு என்னுடைய சார்பில் 10க்கு 10 மதிப்பெண்கள் தருவேன்”
ஹர்பஜன் பாராட்டு:
“சுப்மன் கில் இடம் பெறாததற்காக ஒரு விதமான உணர்வு இருக்கலாம். ஆனால் அது சரியான முடிவு. அனைவரும் சொல்வது போல் இது அவருடைய சாலைக்கான முடிவு கிடையாது. வரலாற்றில் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட தேர்வுகள் நடந்துள்ளது. சூரியகுமார் மற்றும் அகர்கர் ஆகியோர் நம்முடைய அணியை செட்டிலாக விரும்புவதாக சொன்னார்கள்”
இதையும் படிங்க: கடைசில காலை வாரலாமா? கில்லுடன் சேர்த்து தப்பே பண்ணாத அவரை ஏன் கழற்றி வீட்டீங்க? டிகே அதிருப்தி
“அதே போல ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டதற்காகவும் இஷான் கிசான் மீண்டும் வந்துள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பேக்-அப் வீரராக இருந்து வந்த அவர் தற்போது தேர்வாகியுள்ளார். நீங்கள் சிறப்பாக விளையாடியதற்காக மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறினார். அதே போல நிறைய ரசிகர்களும் இந்த அணியின் தேர்வுக்கு வரவேற்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



