கடைசில காலை வாரலாமா? கில்லுடன் சேர்த்து தப்பே பண்ணாத அவரை ஏன் கழற்றி வீட்டீங்க? டிகே அதிருப்தி

Dinesh Karthik
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளதை பல ரசிகர்கள் வரவேற்கிறார்கள். ஏனெனில் திடீரென துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு சஞ்சு சாம்சனை கழற்றி விட்டு ஓப்பனிங்கில் விளையாடும் அற்புதமான வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய கில் கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறினார். மறுபுறம் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்து வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் 37 ரன்கள் குவித்தார். அந்த வகையில் கில்லை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சாம்சன் ஓப்பனிங்கில் தம்மால் அசத்த முடியும் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

- Advertisement -

2 ஏமாற்ற தேர்வுகள்:

அதனால் கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு சயீத் முஸ்டாக் அலி 2025 கோப்பை ஃபைனலில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய இசான் கிசானை தேர்ந்தெடுத்துள்ளது. அதற்காக கடைசி நேரத்தில் பேக்-அப் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியிலிருந்து கழற்றி விடப்படட்டுள்ளார். இந்நிலையில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கில் முக்கிய நேரத்தில் கழற்றி விடப்பட்டுள்ளதாக தினேஷ் கார்த்திக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே போல எந்த தவறும் செய்யாத ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டதிற்காக தாம் வருத்தப்படுவதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டி20 அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் துணைக் கேப்டனாகவும் இருக்கும் சுப்மன் கில் பிளேயிங் லெவனிலிருந்து மட்டுமின்றி மொத்த அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்”

- Advertisement -

டிகே வருத்தம்:

“கூடுதலாக ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய விரும்பிய அவர்கள் இசான் கிசானை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்காக ஜித்தேஷ் சர்மாவை நீக்கியுள்ளார்கள். சொல்லப்போனால் ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கில், ஜிதேஷ் நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய செய்தி. அது நமது அணியில் பற்றாக்குறை இருந்ததை தெளிவாக காட்டுகிறது”

இதையும் படிங்க: 2026 டி20 உலககோப்பை தொடரில் இஷான் கிஷனை தேர்வு செய்ய என்ன காரணம்? – விவரம் இதோ

“நீண்ட காலமாக ஆதரவு பெற்ற கில்லை தேர்ந்தெடுக்க வேண்டிய நாளில் அவர்கள் கழற்றி விட்டுள்ளார்கள். நமது அணியில் விராட், ரோஹித் இல்லாததால் அனுபவம் குறைவாக இருப்பது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதே போல சூரியகுமார் யாதவ் ஃபார்ம் மற்றொரு கவலையளிக்கும் விஷயமாகும். எப்படி இருந்தாலும் கில் இப்படிப்பட்ட தேர்வை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஜிதேஷ்க்காக வருந்துகிறேன். அவர்கள் இருவரும் அதிர்ச்சியான முறையில் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்

Advertisement