கம்பீர் நீங்க ஒன்னும் இந்தியாவின் சிஇஓ கிடையாது.. அவரை செயல்பட விடுங்க.. ஹர்ஷா போக்லே விமர்சனம்

Harsha Bhogle
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருவது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது வழி காட்டுதலில் இந்தியா வழக்கம் போல ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 சொந்த மண்ணில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அந்தத் தோல்விக்கு சோதனை என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்யும் தவறானத் தேர்வுகள் முக்கிய காரணமானது. அது மட்டுமின்றி சொந்த மண்ணில் சுழலுக்கு சாதகமான பிட்ச் வேண்டும் என்ற அவருடைய அணுகுமுறையும் தோல்வியைக் கொடுத்தது.

- Advertisement -

கம்பீர் சிஇஓ கிடையாது:

அதே போல பேட்டிங் வரிசையை அவர் இசை நாற்காலி போல மாற்றுவதும் தோல்விக்கு காரணமாகிறது. அது பற்றி கேட்டதற்கு பேட்டிங் வரிசை என்பது ஓவர்ரேட்டட் என்று தெரிவித்த கெளதம் கம்பீர் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடதால் தோல்வி கிடைத்ததாக பதிலளித்தார். இந்நிலையில் கௌதம் கம்பீர் தம்மை இந்திய அணியின் தலைமை நிர்வாக இயக்குனராக நினைத்துக் கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்துவதாக பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே விமர்சித்துள்ளார்.

உண்மையில் இந்திய அணியை களமிறங்கி விளையாடும் கேப்டன் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் ஹர்ஷா பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் தம்மைத்தாமே தலைமை நிர்வாக இயக்குனராக (சிஇஓ) பார்க்க மாட்டார் என்று நம்புகிறேன். அவர் தன்னை வெறும் ஆலோசகராக மட்டுமே பார்க்க வேண்டும்”

- Advertisement -

ஹர்ஷா விமர்சனம்:

“கேப்டன் தான் உண்மையான தலைமை நிர்வாக இயக்குனர். எனவே நான் இந்த அணியை நடத்துகிறேன் என்ற கோணத்தில் கம்பீர் பயிற்சியாளர் வேலையை பார்க்கக்கூடாது” என்று கூறினார். அத்துடன் தம்முடைய கருத்து சரிதானே என்று அருகிலிருந்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக்கிடம் ஹர்ஷா கேட்டார். அதற்கு “ஆம் அணியை கேப்டன் தான் நிர்வகிக்க வேண்டும்” என்று பொல்லாக்கும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2013இல் ஜடேஜாவின் இடத்தை குறிவைத்து.. 2026இல் சாதித்த ஆகில் ஹொசைன்.. வைரல் ட்வீட்டில் வரவேற்ற சிஎஸ்கே

இது மட்டுமின்றி ஏராளமான முன்னாள் வீரர்கள் மற்றும் டெல்லி ஐபிஎல் அணி உரிமையாளர் பர்த் ஜிண்டால் ஆகியோரும் கம்பீரை விமர்சித்தார்கள். ஆனால் அவரோ தன் மீதான விமர்சனங்களை வைத்து எப்படி முன்னேறலாம் என்று பார்க்கவில்லை. மாறாக தம்மை விமர்சித்த ரிக்கி பாண்டிங், ஸ்ரீகாந்த், ஜிண்டால் ஆகியோருக்கு கம்பீர் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement