16க்கு 14 தோல்வி.. கபில் தேவின் மோசமான உலக சாதனையை தன் பெயரில் எழுதிய ஜோ ரூட்.. ஆஸியில் பரிதாபம்

Joe Root
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் இங்கிலாந்தை தோற்கடித்தது. புகழ்பெற்ற காபா மைதானத்தில் இளஞ்சிவப்பு நிற பந்தில் பகலிரவாக நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா 511 ரன்கள் குவித்து 177 ரன்களை முன்னிலையாகப் பெற்றது. ஆனால் அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து தடுமாற்றமாக பேட்டிங் செய்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதியில் 65 என்ற சுலபமான இலக்கை எளிதாக துரத்திய ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

- Advertisement -

ஆஸியில் ரூட்டின் பரிதாபம்:

முன்னதாக சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்து வரும் ஜோ ரூட் தம்முடைய 13 வருட கேரியரில் ஆஸ்திரேலியாவில் ஒரு சதத்தை கூட அடித்ததில்லை. அதனால் இம்முறை அவர் சதமடிக்கத் தவறினால் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் 3வது போட்டியில் நிர்வாணமாக ஓடுவேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் சபதம் விடுத்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 137 ரன்கள் குவித்த ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் சதத்தை அடித்து அவருடைய மானத்தைக் காப்பாற்றி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 2வது இன்னிங்சில் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அந்த வகையில் இப்போட்டியிலும் அவர் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவவில்லை.

- Advertisement -

மோசமான சாதனை:

இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் விளையாடிய ஜோ ரூட் 16 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. அந்த 16 போட்டிகளில் இங்கிலாந்து 14 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. இதன் வாயிலாக “ஒரு வெளிநாட்டில் ஒரு வெற்றியைக் கூட பெறாமலேயே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்” என்ற கபில் தேவின் மோசமான உலக சாதனையை ஜோ ரூட் தன் பெயரில் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: எனக்கான டைம் வரும் அப்போ நான் யாருன்னு காமிப்பேன்.. நிராகரிப்பு குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கருத்து

இதற்கு முன் இந்தியாவின் கபில் தேவ் பாகிஸ்தானில் 15 போட்டிகளில் விளையாசி ஒரு வெற்றியைக் கூட காணாததே முந்தைய சாதனை. இது ஒரு புறமிருக்க கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 17 போட்டிகளில் இங்கிலாந்து 15வது தோல்வியை சந்தித்துள்ளது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து ஒரு வெற்றியை கூட பெறாதது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆக்கியுள்ளது.

Advertisement