எனக்கான டைம் வரும் அப்போ நான் யாருன்னு காமிப்பேன்.. நிராகரிப்பு குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கருத்து

Jaiswal
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவரே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடியிருந்தார்.

எனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்காத ஜெய்ஸ்வால் கடைசி போட்டியின் போது தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு ஆட்டமிழக்காமல் 116 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தொடர்ச்சியாக இனி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்ற ஆதரவு இருந்து வருகிறது. ஆனால் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பும் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாதது ஏன்? என்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என்பது குறித்தும் சில கருத்துக்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஒருநாள் போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்காது உண்மையில் வருத்தம் தான்.

- Advertisement -

ஆனாலும் நான் அதைப் பற்றி பெரிதாக யோசிப்பது கிடையாது. ஏனெனில் தேர்வுக்குழுவினர் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். இந்திய அணியின் காம்பினேஷன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதற்கேற்றவாரே வீரர்களை தேர்வு செய்கிறார்கள். இந்திய அணியின் வெற்றியை முதன்மையாக நினைத்தே ஒவ்வொரு தொடரிலும் அணித்தேர்வு நிகழ்த்து வருகிறது.

ஆனால் நான் என்னுடைய முயற்சியை விட்டுக் கொடுக்காமல் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக கடினமாக உழைக்க காத்திருக்கிறேன். நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் எனக்கும் அவர்கள் வாய்ப்பினை வழங்குவார்கள். இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : ஒருநாள் தொடர் முடிந்த கையோடு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எடுத்துள்ள புதிய முடிவு – ஸ்மார்ட் மூவ்

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் இணைந்து விளையாடும் போது அவர்கள் என்னுடைய பேட்டிங் மேம்பட நிறையவே உதவுவார்கள். ரோகித்துடன் களத்தில் நின்று பேசிக்கொண்டே விளையாடும் போது நாம் எவ்வாறு இன்னிங்ஸை துரிதப்படுத்த வேண்டும் என்ற யோசனைகளை அவர் அளிப்பார். அதேபோன்று விராட் கோலியுடன் பேசும்போது இன்னிங்சை எப்படி நிலைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிகுறிகளையும் வழங்குவார். அவர்கள் இருவருடன் கூட்டணி அமைத்து விளையாடுவது என்பது மிகச் சிறப்பான ஒன்று அதனை இந்த தொடரில் தான் உணர்ந்ததாகவும் ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement