0 டூ 202 ரன்ஸ்.. வெ.இ வீரர் க்ரிவ்ஸ் இரட்டை உலக சாதனை.. பென் ஸ்டோக்ஸை முந்தி வரலாறு

Justin Greaves
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் இரண்டாம் தேதி கிறிஸ்ட்சர்ச் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்து நியூசிலாந்தை 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது.

அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 52, மைக்கேல் பிரேஸ்வெல் 47 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜஸ்டின் கிரிவ்ஸ், ஓஜய் சீல்ட்ஸ், கிமர் ரோச், ஜெய்டேன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக 64 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூசிலாந்து 466 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

0 டூ ஹீரோ கிரிவ்ஸ்:

அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 176, டாம் லாதம் 145 ரன்களை எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக கிமர் ரோச் 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 531 மெகா இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் ஜான் கேம்பல் 15, சந்தர்பால் 6, அலிக் அதனாஷ் 5, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 72/4 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது.

அப்போது ஷாய் ஹோப் நங்கூரமாக விளையாடி சரிவை தடுத்து நிறுத்தினார். அவருடன் சேர்ந்த ஜஸ்டின் க்ரிவ்ஸ் தம்முடைய பங்கிற்கு நங்கூரத்தைப் போட்டு நியூசிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சாய் ஹோப் சதத்தை அடித்து 140 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இரட்டை உலக சாதனை:

மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜஸ்டின் கிரிவ்ஸ் சதத்தை அடித்து அசத்திய நிலையில் எதிர்புறம் வந்த டெவின் இம்லாச் 4 ரன்னில் நடையைக் கட்டினார். ஆனால் அடுத்து வந்த கிமர் ரோச் நங்கூரமாக விளையாடி 58* (233) ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து அசத்திய கிரிவ்ஸ் இரட்டை சதமடித்து 202* (388) ரன்களை எடுத்த போது போட்டி டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 பந்தில் டக் அவுட்டான ஜஸ்டின் கிரிவ்ஸ் 2வது இன்னிங்ஸில் 202* ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுட்டாகி 2வது இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் ஏற்கனவே 1935ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆர்த்தர் நர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் டக் அவுட்டாகி பின்னர் 231 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 531 சேசிங்கில் 457/6 ரன்ஸ்.. நியூஸிலாந்துக்கு பயத்தைக் காட்டி உலக சாதனையை நெருங்கிய வெ.இ

இது மட்டுமின்றி ஒரு டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் கிரிவ்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 6வது இடத்தில் 155 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.

Advertisement