கோலியை பாத்து வளந்ர்தேன்.. அதுக்குள்ள முடிக்கலன்னா அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம்.. மார்கோ பேட்டி

Marco Jansen
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா முடிந்தளவு போராடியும் 332 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி 135, ரோஹித் சர்மா 57, கேஎல் ராகுல் 60, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார்கள். பவுலிங் துறையில் குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். முன்னதாக அப்போட்டியில் ஜெய்ஸ்வால் அவுட்டானதும் விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து அட்டகாசமாக விளையாடினார்கள்.

- Advertisement -

விராட் கோலியை பார்த்து வளர்ந்தேன்:

இந்தியாவுக்காக அதிக (392) போட்டிகளில் ஒன்றாக விளையாடிய ஜோடி என்ற சாதனையைப் படைத்த அவர்கள் ராஞ்சியில் தங்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதனால் இந்தியா 350 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்வதற்கான அடித்தளத்தை அவர்கள் அமைத்தனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் விராட் கோலி போன்றவரை முதல் 15 பந்துகளில் அவுட்டாக்கி முடிக்க வேண்டுமென தென்னாப்பிரிக்கா வீரர் மார்கோ யான்சன் தெரிவித்துள்ளார்.

இல்லையென்றால் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் தாம் விராட் கோலியை பார்த்து கிரிக்கெட்டில் வளர்ந்ததாகவும் கூறியுள்ளார். இது பற்றி அப்போட்டியில் 70 ரன்கள், 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு பயத்தைக் கொடுத்த அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி விளையாடியதைப் பார்த்தது நன்றாக இருந்தது. தொலைக்காட்சியில் அவரைப் பார்த்து வளர்ந்த நான் தற்போது அவருக்கு எதிராக பவுலிங் செய்கிறேன்”

- Advertisement -

யான்சென் பாராட்டு:

“அது எரிச்சலூட்டுவதாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. அனைத்து விதமான ஷாட்டுகளையும் கச்சிதமாக விளையாடும் அவர் அதிகம் மாறியதாக தெரியவில்லை. அவர் நீண்ட நேரம் விளையாடினார். விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரரை அவுட்டாக்குவது கடினம். அவர் எப்போதும் நான் முதல் 10 – 15 பந்துகளில் அவுட்டாக்க முயற்சிப்பேன்”

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற.. இந்த விராட், ரோஹித் வதந்திய உண்மையாக்குங்க.. பீட்டர்சன் விரும்பம்

“அந்த சமயங்களில் தான் அவர் பிட்ச் பற்றி அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தார் போல் தங்களை மாற்ற முயற்சிப்பார்கள். ஆனால் ஒருமுறை அவர் செட்டிலாகி விட்டால் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். இங்கே இருக்கும் அனைவருமே எப்படி விளையாட வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள். அதனாலேயே நீங்கள் எப்போதும் பி மற்றும் சி ஆகிய திட்டங்களையும் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார் .

Advertisement