இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற.. இந்த விராட், ரோஹித் வதந்திய உண்மையாக்குங்க.. பீட்டர்சன் விரும்பம்

Kevin pieterson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் 2012 முதல் தொடர்ந்து 12 வருடங்களாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டது. அது கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 0 – 3 (3) என்ற கணக்கில் இந்தியா சந்தித்த வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 1 – 3 (5) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது. அந்த தோல்விகளுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா சுமாராக விளையாடியது முக்கிய காரணமானதாக தேர்வுக்குழு கருதியது. எனவே அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

வதந்தி உண்மையானால் நல்லாருக்கும்:

அதற்கு முன் அவர்களாகவே அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் ஓய்வு பெறுவதாக பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகமடைய வைத்தது. அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது.

ஆனால் அடுத்து நடைபெற்ற தெனாப்பிரிக்க தொடரில் மீண்டும் மோசமாக விளையாடிய இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதையே இந்திய அணி மறந்து விட்டதா? என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். இதற்கிடையே தொடர் தோல்விகளால் விராட், ரோஹித் ஆகியோரை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க பிசிசிஐ விரும்புவதாக சில செய்திகள் காணப்படுகின்றன.

- Advertisement -

பீட்டர்சன் விருப்பம்:

இருப்பினும் இளம் அணி வளர்ந்து வருவதால் அது வதந்தியாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற விராட், ரோஹித் ஓய்வை திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அந்த வதந்தியான செய்தி உண்மையாக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: விராட் கோலியிடம் இருக்கும் இந்த திறமைகள் எல்லாம் வேறலெவல்.. அவர் ப்ரூப் பண்ண தேவையில்லை – தினேஷ் கார்த்திக்

“ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் படிக்கும் செய்திகளை நான் எப்போதும் நம்புவதில்லை. ஆனால் விராட், ரோஹித் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறார்கள் என்ற செய்தி பாதி உண்மையாக இருந்தால் கூட அதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பது முக்கிய விவாதமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களாக அவர்கள் மீண்டும் விரும்பினால் கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement