இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். எதிர்வரும் 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாட விரும்பும் அவர் தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.
விராட் கோலி யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை : தினேஷ் கார்த்திக்
அந்த வகையில் நேற்று ராஞ்சி நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 135 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ராஞ்சி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 120 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 135 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
நேற்று அடித்த சதம் விராட் கோலியின் 52-ஆவது ஒருநாள் சதமாக பதிவாகியிருந்தது. இதன்மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய அவர் இன்றளவும் தான் ரன் மிஷின் என்பதை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் விராட் கோலியிடம் இருக்கும் திறமைகளை யாரிடமும் நிரூபிக்க அவசியமில்லை என்றும் அவர் ஒரு மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்றும் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி இனியும் நிரூபிப்பதற்கு எதுவும் கிடையாது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 52 சதங்களை அடித்த அவர் யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி விளையாட்டில் அவர் காட்டும் பசி அதன்மீது இருக்கும் ஒழுக்கம், என்னை வியக்க வைக்கிறது.
இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை நெருங்கும் விராட் கோலி – விவரம் இதோ
இன்றளவும் உடற்தகுதியின் மீதுள்ள ஆர்வம் என பலவற்றிலும் அவர் பலருக்கும் முன் மாதிரியாகவே இருக்கிறார் எனவே அவரை விமர்சிப்பதை தாண்டி அவரை நாம் ஆதரிக்க வேண்டும். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் விராட் கோலி 2027 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.



