ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன் ஆண்ட்ரே ரசல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டது. அந்த வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ரசலை கழற்றி விட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
ஏனெனில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கக்கூடிய அவர் 2014 முதல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சீசனில் கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு அவரும் தம்முடைய பங்காற்றினார். அப்போதிலிருந்து கொல்கத்தா முதன்மை ஆல் ரவுண்டராக விளையாடிய ரசல் நிறைய வெற்றிகளிலும் பங்காற்றி வந்தார்.
ரசல் தீடீர் ஓய்வு:
அதன் காரணமாக ஓய்வு பெறும் வரை ரசல் கொல்கத்தா அணிக்காக விளையாடுவார் என்று அதன் தலைமை நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் 2022ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தார். அதற்கேற்றார் போல் 2024 சீசனில் 222 ரன்களை அடித்த அவர் 19 விக்கெட்டுகளையும் எடுத்து கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனாலேயே கடந்த வருடம் அவர் 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார்.
ஆனால் 2025 சீசனில் 167 ரன்கள், 8 விக்கெட்டுகள் எடுத்த ரசல் தடுமாற்றமாக விளையாடினார். அதனால் 2020இல் கொடுத்த வாக்கை மீறிய கொல்கத்தா அணி ரசலை கழற்றி விட்டது. இருப்பினும் அதிரடியாக விளையாடக்கூடிய அவரை ஐபிஎல் 2026 ஏலத்தில் வாங்குவதற்கு சிஎஸ்கே உள்ளிட்ட நிறைய அணி நிர்வாகங்கள் தயாராக இருக்கின்றன.
கொல்கத்தாவின் விஸ்வாசி:
இந்நிலையில் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து 37 வயதில் ரசல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தம்முடைய கேரியரை உச்சத்திலேயே முடிக்க விரும்புவதால் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் இவ்வளவு வருடங்கள் கொல்கத்தாவுக்கு விளையாடிய விட்டுட்டு இனிமேல் வேறு அணிக்காக விளையாடுவதைத் தம்மாலேயே பார்க்க முடியாது என்று ரசல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ருதுராஜ் இஸ் பேக்.. முதல் தெ.ஆ போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை அறிவித்த ராகுல் பேட்டி
அப்படி சிந்திப்பது கூட தமக்கு தூக்கமற்ற இரவுகளைக் கொடுத்ததால் கொல்கத்தா அணியுடன் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக ரசல் கூறியுள்ளார். அதே சமயம் 2026 முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பவர் கோச்சாக செயல்பட உள்ளதாகவும் ரசல் அறிவித்துள்ளார். அந்த வகையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற ரசல் வேறு அணிக்குச் செல்லாமல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட விஸ்வாசியாக முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



