தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0 – 2 (2) என்ற கணக்கில் இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் துவங்கியது. மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மறுபுறம் காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக கேஎல் ராகுல் புதிய கேப்டனாக களமிறங்கிய போதிலும் இந்தியா தொடர்ந்து 19வது முறையாக டாஸ் வீசுவதில் தோல்வியைச் சந்தித்தது. 2023 உலகக்கோப்பை செமி ஃபைனல் முதல் இதுவரை விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா டாஸ் வீசுவதில் தோற்றுள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ஓப்பனிங் வீரராக களமிறங்குவார் என்று ராகுல் அறிவித்தார்.
இந்திய அணி:
அதே போல ருதுராஜ் கெய்க்வாட் 3வது இடத்தில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் காயத்தால் வெளியேறியதிலிருந்து மீண்டும் இந்திய அணிக்குள் திரும்ப முடியாமல் தவித்தார். இருப்பினும் தொடர்ந்து உள்ளூரில் போராடிய அவர் ஒரு வழியாக இப்போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடியாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ரிஷப் பண்ட் வாய்ப்பைப் பெறாத நிலையில் ராகுல் விக்கெட் கீப்பர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களும் இப்போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கியுள்ளார்கள்.
ராகுல் அறிவிப்பு:
இது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பந்து வீசவே விரும்புகிறோம். எங்களுடைய தயாராகும் முறைகள் நன்றாக இருந்தன. நிறைய வீரர்கள் திரும்ப வருவதால் எங்களுடைய அணிக்கு மீண்டும் எனர்ஜி கிடைத்துள்ளது. நாங்கள் களத்தில் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறோம். ஒருநாள் அணியில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாகும்”
இதையும் படிங்க: இப்படியே போனா டெஸ்ட் அழிஞ்சுடும்.. இந்தியா ஜெய்க்கனும்ன்னா அதை மாத்துங்க.. கம்பீருக்கு ஹர்பஜன் அட்வைஸ்
“இது நல்ல அணிக்கு எதிராக எங்களுடையத் திறமையைச் சோதிப்பதற்கு கிடைத்த சவாலாகும். எங்களுடைய அணியில் 3 ஸ்பின்னர்கள் 3 வேகங்கள் விளையாடுகின்றனர்” என்று கூறினார். இந்திய அணி: ரோஹித் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல் (கேப்டன்/ராகுல்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா



