இப்படியே போனா டெஸ்ட் அழிஞ்சுடும்.. இந்தியா ஜெய்க்கனும்ன்னா அதை மாத்துங்க.. கம்பீருக்கு ஹர்பஜன் அட்வைஸ்

Harbhajan Singh
- Advertisement -

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 0 – 3 (3) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0 – 2 (3) என்ற கணக்கில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

அதனால் சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதையே இந்திய அணியினர் மறந்து விட்டார்களா? என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். அந்தத் தோல்விகளுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. அதே போல சுழலுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்களும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

அழிக்கமாக காப்பாத்துங்க:

அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் இப்படிப்பட்ட பிட்ச்கள் வேண்டும் என்று கேட்டு வாங்குவதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அதில் இந்திய அணி சிறப்பாக விளையாடியத் தவறியதால் தோல்வியைச் சந்தித்ததாகவும் அவர் சொன்னது ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு தலைப்பட்சமான பிட்ச்களை அமைப்பது ஏற்கனவே பின்னடைவை சந்தித்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றாது என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

எனவே இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்காமல் காப்பாற்றுவதற்கு தரமான பிட்ச்களை அமைக்க வேண்டும் என்று அவர் கெளதம் கம்பீரை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “நாம் நல்ல பிட்ச்களில் விளையாட வேண்டும். நாம் ஒரு தசாபத்திற்கும் மேலாக இது போன்ற ஒரு தலைப்பட்சமான பிட்ச்களில் விளையாடி வருகிறோம்”

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:

“அதனாலேயே இந்திய கிரிக்கெட் வளர்ச்சி காணவில்லை. அது போன்ற பிட்ச்சுகளில் நீங்கள் விளையாடும் போது ஏதோ ஒரு இடங்களில் சிக்கி விடுகிறீர்கள். நாம் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றி, விளம்பரப்படுத்துவதைப் பற்றி பேசுகிறோம். ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கான வழியல்ல. ஒருவேளை நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற விரும்பினால் நல்ல பிட்ச்சுகளில் விளையாடத் துவங்க வேண்டும்”

இதையும் படிங்க: 12 பந்தில் 50..16 சிக்ஸ் 148 ரன்ஸ்.. குரு யுவ்ராஜ் சாதனையை சமன் செய்த அபிஷேக்.. புதிய சாதனை

“அது உங்களுடைய பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் ஆகிய அனைவரும் விளையாட்டில் இருக்க உதவும். நாம் கடந்த இங்கிலாந்து தொடரில் நன்றாக விளையாடினோம். இந்தியாவுக்கு வெளியே செல்லும் போது நம்முடைய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் சொந்த மண்ணில் விளையாடும் போது கொடுக்காவிட்டால் எப்படி அவர்கள் நமக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள்? எனவே இது இந்தியா நல்ல பிட்ச்களில் விளையாட வேண்டிய நேரமாகும்” என்று கூறினார்.

Advertisement