கம்பீரின் இந்த முடிவு ரொம்ப தப்பு.. இந்திய வீரர்கள் உள்ளூரை மதிக்காததே தோல்விக்கு காரணம்.. கபில் தேவ்

Kapil Dev
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0 – 2 (2) என்ற கணக்கில் இந்தியா 25 வருடங்கள் கழித்து தங்களது சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 0 – 3 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியைச் சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடியது முக்கிய காரணமானது.

அதே போல பிட்ச்கள் சுழலுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக இருந்ததும் தோல்விக்கு காரணமானது. அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச்களை வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அதில் இந்திய அணி சிறப்பாக விளையாடாததே தோல்விக்கு காரணமானதாகவும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளை மதிக்கனும்:

இந்நிலையில் இந்திய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மதிப்பளித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததே சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவதற்கு காரணம் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதுவே இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோற்பதற்கான காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதே போல 2.5 நாட்களில் முடியும் அளவுக்கு ஒரு தலைப்பட்சமான பிட்ச்களை அமைக்கும் கௌதம் கம்பீரின் முடிவு மிகவும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி கபில் தேவ் பேசியது பின்வருமாறு. “இதற்கு காரணம் நம்முடைய வீரர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட ஸ்டைல், ஃபுட் வொர்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்கள். இத்தனைக்கும் அவர்கள் உள்ளூரில் பல்வேறு விதமான பிட்ச்களில் விளையாடிய பின்பே இந்திய அணிக்கு வந்துள்ளார்கள். அதே சமயம் தற்போதுள்ள டாப் வீரர்களில் எத்தனை பேர் உள்ளூரில் விளையாடுகிறார்கள்? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”

- Advertisement -

கம்பீரின் தவறான முடிவு:

“அது மிகவும் முக்கியமான விஷயமாகும். நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தரமான பவுலர்களை எதிர்கொள்ளாவிட்டால் நிச்சயம் சர்வதேச அளவில் தடுமாறுவீர்கள். பிட்ச்கள் மிகவும் முக்கியமானது. அது 2 அல்லது இரண்டரை நாட்களில் முடிவடைவதாக இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட பிட்ச்களில் நீங்கள் டாஸ் தோற்றால் போட்டியையும் தோற்று விடுவீர்கள்”

இதையும் படிங்க: இந்தியாவின் புதையல் பும்ரா.. டெஸ்ட்டுக்கு முழுக்கு போட்டுட்டு.. டி20, வெளிநாட்டில் மட்டும் ஆடனும்.. அஸ்வின் கோரிக்கை

“எந்த அணியும் 200 ரன்கள் கூட அடிக்க முடியாத அளவுக்கு பிட்ச்சை அமைத்து என்ன பயன்? அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது” என்று கூறினார். மொத்தத்தில் இந்த அடுத்தடுத்த தோல்விகளால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானுக்கு கிழே இந்தியா 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதனால் 2027 ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளும் நெருக்கடியாகியுள்ளது.

Advertisement