இந்தியாவின் புதையல் பும்ரா.. டெஸ்ட்டுக்கு முழுக்கு போட்டுட்டு.. டி20, வெளிநாட்டில் மட்டும் ஆடனும்.. அஸ்வின் கோரிக்கை

R Ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட்வாஸ் தோல்வியை சந்தித்திருந்தது. அந்த வேதனை முழுமையாக தீர்வதற்குள் இந்திய அணி மீண்டும் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. அதில் ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க உள்ள நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 தொடரில் மட்டும் இந்தியாவுக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் வித்தியாசமான ஆக்சனை கொண்ட உலகின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா இந்தியாவின் புதையல் என்று ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

புதையல் பும்ரா:

அப்படிப்பட்ட புதையலான பும்ரா நீண்ட காலம் விளையாடுவதற்காக இருதரப்பு ஒருநாள் தொடர்களிலும், சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடக்கூடாது என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வெளிநாட்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் பும்ரா விளையாடினால் இந்தியாவுக்காக பல சரித்திர வெற்றிகளைப் பெற முடியும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்படி செய்வது பும்ராவின் பணிச்சுமையையும் நிர்வகிக்க உதவும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவுடன் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. ஒருவேளை இப்போது அவருடன் நான் இருந்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுங்கள் என்று சொல்வேன். தேவைப்படாத வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதீர்கள் என்றும் சொல்வேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதையே விரும்புவார்”

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை:

“அது சவாலானது என்பது அவருக்குத் தெரியும். இருப்பினும் இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காகவும் பும்ராவின் நன்மைக்காகவும் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அர்த்தமற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதை பார்க்க விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: மன்கட் பண்ணிருந்தா இந்நேரம் தமிழ்நாடு ஜெய்ச்சுருக்கும்.. ஐடியா இல்லாத பவுலர் மீது அஸ்வின் அதிருப்தி

“அதனால் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் வேறு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளித்து வருங்காலத்தையும் கட்டமைக்க முடியும். பும்ரா இந்தியாவின் புதையல். வித்தியாசமான ஆக்சனை கொண்டிருப்பது அவருடைய தனித்துவம். ஆனால் அதுவே அவருக்கு உடல்ரீதியாக பணிச்சுமையையும் பாதிப்பையும் கொடுக்கிறது. இப்படித்தான் நான் அவருடைய வருங்காலத்தைப் பார்ப்பேன். சாம்பியன் பவுலரான அவர் சமீப காலங்களில் இந்தியா பெற்ற புகழ்மிக்க வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார்” என்று கூறினார்.

Advertisement