டெஸ்ட் கிரிக்கெட்டின் வருங்காலத்தை இந்திய மண்ணில் காப்பாற்ற இதை செய்தே ஆகனும் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan Singh
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியிருந்தது. அதேவேளையில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களை மாற்ற வேண்டும் : ஹர்பஜன் சிங்

அதோடு சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த இந்த 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இழந்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் இந்த தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட வேளையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சோபிக்க தடுமாறியதும் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த 2 டெஸ்ட் போட்டிகளுமே விரைவில் பெரிய போரட்டமின்றி முடிவடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் இந்திய மண்ணில் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்காமல் ஐந்து நாட்கள் செல்லும் அளவிற்கு தேவையான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை ஐந்து நாட்கள் நடக்க வேண்டிய போட்டி இது. ஆனால் இந்திய மண்ணில் பெரும்பாலும் நடைபெறும் போட்டிகள் இரண்டு மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்து விடுகின்றன. ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் டெஸ்ட் போட்டிகளின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு இனி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்காமல் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என இருவருக்குமே போட்டி அளிக்கக்கூடிய ஆடுகளங்களை அமைத்து ஐந்து நாட்கள் வரை செல்லும் அளவிற்கு ஆடுகளங்களை வடிவமைக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நிதீஷ் ரெட்டியும், துருவ் ஜுரேலும் டெஸ்ட்டில் சொதப்ப இதுவே காரணம் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

அதேபோன்று இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாற அனுபவ வீரர்கள் இல்லாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் விராட் கோலி, புஜாரா ரகனே போன்ற வீரர்கள் இருக்கும்போது அதிக ஓவர்களை எதிர்கொண்டு விளையாடி போட்டியை நகர்த்திச் செல்வார்கள். ஆனால் தற்போதுள்ள இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாட விரும்பி விக்கெட்டுகளை இழப்பதும் நாம் தோல்வியை சந்திக்க ஒரு காரணம் என்று நினைக்கிறேன் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement