நிதீஷ் ரெட்டியும், துருவ் ஜுரேலும் டெஸ்ட்டில் சொதப்ப இதுவே காரணம் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

Nitish and Jurel
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது (0-2) பூஜ்யத்திற்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

துருவ் ஜுரேல், நிதீஷ் ரெட்டி தடுமாற என்ன காரணம்? : ஆகாஷ் சோப்ரா

அதேவேளையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வு மிகவும் மோசமாக இருந்ததாகவும், மிடில் ஆர்டரில் சரியான பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதும் பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜுரேல் என இருவரும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அணிக்குள் வந்த திரு ஜுரேல் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிதீஷ் ரெட்டி மற்றும் ஜுரேல் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன காரணம்? என்பது குறித்தும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் தடுமாற என்ன காரணம்? என்பது குறித்து முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் நிறைய ஆடவில்லை என்றாலும் பெரிய மேடைகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொண்டு வெகு விரைவாகவே டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஆனால் துருவ் ஜுரேல் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் குறைந்த அளவிலான உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். எனவே சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவர்கள் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடி அனுபவத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும்.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் கே.எல் ராகுலின் இடத்திற்கு ஆபத்து இருக்கு.. காரணத்தை கூறிய – ராபின் உத்தப்பா

இதன் காரணமாக இனிவரும் சீசன்களில் அவர்கள் உள்ளூர் தொடரில் அதிகளவு சிகப்பு பந்து கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் இதுபோன்ற பெரிய தொடர்களில் அவர்களால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement