டெல்லி அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சனை இதுதான்.. இதை செய்ஞ்சா வேற லெவல் ஆயிடும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash Chopra and DC
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடரின் பிற்பாதியில் மோசமான சரிவை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் அவர்கள் வலுவான கம்பேக்கை கொடுக்க காத்திருக்கின்றனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதை சரி செய்தால் போதும் : ஆகாஷ் சோப்ரா

ஏற்கனவே அக்சர் பட்டேல் தலைமையில் இந்த ஆண்டு விளையாடியிருந்த அந்த அணி அவரது தலைமையிலேயே அடுத்த ஆண்டும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் என சிறப்பான கலவையில் இருக்கும் டெல்லி அணி பலமாக இருக்கும் வேளையில் பேட்டிங்கில் கூடுதலாக சரியான வீரர்களை தேர்வு செய்ய காத்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை எந்தவித குறையும் இல்லை என்றும் அந்த அணி சரி செய்ய வேண்டிய ஒரே இடம் நிலையான துவக்க வீரர்களுக்கான இடம் மட்டும் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சு துறையை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களும் சரி சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், விப்ராஜ் நிகம் என மூன்று தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். தற்போது டெல்லி அணியில் இருக்கும் ஒரே பிரச்சனை அந்த அணியின் துவக்க வீரர்கள் தான். ஏனெனில் இந்த ஆண்டு அந்த அணி துவக்க வீரர்களாக டூபிளெஸ்ஸிஸ், ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரல், கே.எல் ராகுல் என ஏகப்பட்ட வீரர்களை சோதித்து விட்டது.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்கள் இவர்கள் தான் – ஆகாஷ் சோப்ரா

ஆனால் அவர்களுக்கு நிலையான துவக்க வீரர்களுக்கான ஜோடி கிடைக்கவில்லை. எனவே அடுத்த ஆண்டு நிலையான மற்றும் நிரந்தரமான துவக்க வீரர்களுடன் அவர்கள் களமிறங்கும் பட்சத்தில் அந்த அணி மேலும் பலமடையும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement