இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு துவங்கும் முன்னதாகவே இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் இந்திய ஏ அணிக்காக தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்ட நிதீஷ் ரெட்டி :
ஏனெனில் சொந்த மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களே அதிகம் தேவை என இந்திய அணியின் நிர்வாகம் நினைத்தது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டான நிதீஷ் ரெட்டி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடியிருந்தார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டமானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த முதல் ஆட்டத்தில் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து நான்கு ரன்கள் அடித்திருந்த நிலையில் கழுத்து வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் எஞ்சியுள்ள நாட்களில் இருந்து வெளியேறிய சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒருவேளை சுப்மன் கில் இரண்டாவது போட்டியை தவறவிடும் பட்சத்தில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்பதனால் நிதீஷ் ரெட்டி மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் இவர்தான் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இருந்தாலும் நிதீஷ் ரெட்டிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது புதிராகவே இருக்கிறது. அதோடு சுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது நான்காவது இடத்தில் தேவ்தத் படிக்கல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.



