அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களையும், தக்க வைத்துக்கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்தது.
2026 ஐ.பி.எல் தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் இவர்தான் :
அந்த வகையில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி அடுத்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து, விடுவித்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. இந்த பட்டியலில் பல்வேறு அணிகளிலும் பல வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால் மினி ஏலத்தின் போது பல மாற்றங்கள் நடைபெறும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் வீரர்களின் வெளியேற்றம் மற்றும் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது, புதிய ஊழியர்களை அணிக்குள் கொண்டு வருவது, புதிய கேப்டனை அறிவிப்பது என முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் யார்? என்பதை அந்த அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அந்த வகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது 20 கோடியே 50 லட்சம் என்கிற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அந்தவகையில் கடந்த 2024, 2025 என கடந்த இரண்டு சீசன்களாக அவரே அந்த அணியின் கேப்டனாக இருந்து வந்துள்ளர். அவரது தலைமையின் கீழ் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் அவரே வழிநடத்துவார் என்று அதிகாரப்0பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சர்பராஸ், சுதர்சன் நிலையை பாருங்க.. கம்பீர் இந்திய வீரர்களை இப்படி பயமுறுத்துனா ஜெய்க்க முடியாது.. ஃகைப்
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றிய வேளையில் அடுத்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



