வரலாற்று போட்டியில் இந்தியாவால் நெருங்கக் கூட முடியாது.. மைக்கேல் வாகன் கருத்துக்கு ரசிகர்கள் பதிலடி

Micheal Vaugh
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் அத்தொடரில் கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தயாராகி வருகின்றன. ஆஷஸ் கோப்பையை வெல்வது மிகப்பெரிய கௌரவமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் அந்தக் கோப்பையை வெல்வதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஆக்ரோசமாக மோதிக் கொள்வார்கள்.

அதனால் அனல் பறக்கக்கூடிய ஆஷஸ் தொடரை அனைத்து நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான ரசிகர்கள் பார்ப்பார்கள். முன்னதாக சமீப காலங்களாகவே ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஒருதலைபட்சமாக தோற்கடித்து வருகிறது. குறிப்பாக கடைசியாக 2010/11 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா மண்ணில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

- Advertisement -

இந்தியா நெருங்க முடியாது:

இருப்பினும் அதன் பின் 15 வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து திண்டாடி வருகிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த (2018/19, 2020/21) டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. மேலும் 2014 – 2023 வரை தொடர்ந்து 10 வருடங்களாக ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வென்றது.

கடைசியாக 3 – 1 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த தொடரில் கூட இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு இப்போதெல்லாம் இங்கிலாந்தை விட இந்தியா தான் உண்மையான போட்டியைக் கொடுப்பதாக நிறைய முன்னாள் வீரர்கள் வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியைக் கொடுப்பதில் இந்திய அணி இங்கிலாந்தை நெருங்கக் கூட முடியாது என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சமீப காலங்களில் ஆஸ்திரேலியா கண்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் தொடர்கள் போட்டி மிகுந்ததாக இருக்கிறது என்பதில் கேள்வியில்லை. ஆனால் அதற்காக அது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை விட மிகப்பெரியது என்று என்னிடம் சொல்லாதீர்கள்”

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ் இப்படி ஆடுறதுதான் இந்திய அணிக்கு பெரிய ஸ்ட்ரென்த் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

“ஆஸ்திரேலியாவில் இம்முறை நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரியதாக இருக்கிறது அதை உங்களால் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் பெற முடியாது” என்று கூறியுள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் கடந்த 15 வருடமாக ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாத இங்கிலாந்து எப்படி ஆஸ்திரேலியாவுக்கு சிறந்த போட்டியாளராக இருக்க முடியும்? என்று அவருக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement