17 வயதில் சோகம்.. பில் ஹுக்ஸ்க்கு போல இயற்கை எய்திய இளம் ஆஸி வீரர்.. ரசிகர்கள் வேதனை

Ben Austin
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஃபில் ஹுக்ஸ் கடந்த 2014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது சீன் அபௌட் வீசிய பவுன்ஸர் பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை செய்த போதிலும் அவர் 27 வயதில் இயற்கை எய்தியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேன் தலையில் பந்து பட்டால் உடனடியாக மருத்துவர் சோதிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஐசிசி உருவாக்கியது. அத்துடன் ஹெல்மெட்டின் பின்புறத்தில் கூடுதலான பாதுகாப்பு வசதிகள் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் வந்தால் அடிபட்டு இயற்கை எய்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

17 வயதில்:

மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஃபெர்ன்ட்ரீ கல்லி எனும் மைதானத்தில் பயிற்சிகளை எடுத்துள்ளார். அப்போது சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை எதிர்கொண்டு அவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயிற்சி எடுத்துள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாகப் பட்டுள்ளது.

அதனால் சுருண்டு விழுந்த அவரை உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கே அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தப்பட்டது. ஆனால் வியாழக்கிழமை சிகிக்சை பலனின்றி ஆஸ்டின் இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஃபெர்ன்ட்ரீ கல்லி எனும் கிளப் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:

அத்துடன் ஆஸ்திரேலியா வாரியம், விக்டோரியா வாரியமும் பென் ஆஸ்டின் இயற்கை எழுதியதை உறுதி செய்துள்ளது. அதற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைவர் மைக் பைர்ட் “பென் ஆஸ்டின் குடும்பத்துக்கு போதுமான ஆதரவை கொடுப்போம்” என்று உறுதியளித்துள்ளார். தம்முடைய மகனை இழந்தது தாங்க முடியாத மிகப்பெரிய இழப்பு என்று பென் ஆஸ்டின் தந்தை ஜேஸ் ஆஸ்டின் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எப்படி ரேங்க் போடுறாங்கனு தெரியல.. ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தது குறித்து – தினேஷ் கார்த்திக் கருத்து

அத்துடன் காயத்தை ஏற்படுத்திய பந்தை வீசிய 2 சக வீரர்கள் மனமுடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த 2 வீரர்களுக்கும் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் ஜேஸ் கூறியுள்ளார். பென் ஆஸ்டின் நினைவாக ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப் மைதானத்தில் “பூக்கள், தண்ணீர் பாட்டில்கள், பேட்” ஆகியவற்றை வைத்து சக வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பில் ஹுக்ஸை விட மிகவும் குறைந்த வயதில் பென் ஆஸ்டின் இவ்வுலகம் விட்டு பிரிந்ததற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement