சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான புதிய பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா முதலிடத்தில் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் :
இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது 781 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான இப்ராஹிம் ஜாத்ரான் இரண்டாவது இடத்தினையும், மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் பிடித்துள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் முதல் இடத்திற்கு வந்துள்ள ரோஹித் சர்மா ஐந்தாவது இந்திய வீரராக இந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு அவர் தரவரிசையில் முதலிடத்தில் பிடித்ததுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதில் எனக்கு குழப்பம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் பிடித்ததை நான் ஆச்சரியமாக பார்க்கிறேன். ஏனெனில் 2019-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா டாப் ஃபார்மில் அசத்தலாக விளையாடும் அப்போது அவரால் முதல் இடத்தை பிடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் முதலிடத்தில் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
இந்த முறை அவர் எப்படி முதலிடத்தை பிடித்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது? என்பதும் எனக்கு புரியவில்லை ஆனாலும் ரோகித் சர்மா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.



