இதுலயே எப்படி இருக்கார்ன்னு புரிஞ்சுக்கோங்க.. ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நலம் பற்றி கேப்டன் சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அத்தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. சிட்னியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடிக்கும் போது தோள்பட்டையில் மிகப்பெரிய காயத்தைச் சந்தித்தார்.

அதனால் தொடர்ந்து விளையாட முடியாத அவர் பாதியிலேயே விலகினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 74*, ரோஹித் சர்மா 121* ரன்கள் அடித்து இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்ததனர். அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படவில்லை. ஆனால் அன்றைய நாளின் இறுதியில் பலத்த காயத்தை சந்தித்துள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செய்தி வெளியிட்டது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்:

அடுத்த நாள் விலா எழும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் அனுப்பிய மெசேஜ்க்கு அவர் பதில் கொடுத்துள்ளதால் நன்றாக இருக்கிறார் என்று நம்புவதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெளியிலிருந்து பார்க்கும் போது அந்த கேட்ச் சாதாரணமானது போல் தெரியும். ஆனால் உடை மாற்றும் அறைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் சென்றதும் அவரைப் பார்த்த சக வீரர்கள் மருத்துவ உதவி தேவைப்படுவதாக கருதினார்கள்”

- Advertisement -

சூரியகுமார் அப்டேட்:

“அதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் துரதிஷ்டவசமானது மற்றும் அரிதானது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். தற்போது குணமடைந்து வரும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு கொடுத்து வருகிறது. காயம் ஏற்பட்டது என்று தெரிந்ததும் அவருக்கு நான் தொலைபேசியில் அழைத்தேன்”

இதையும் படிங்க: “நான் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவன்” ஒரு தொடரோடு நீக்கியது ஏமாற்றம் – கருண் நாயர் பேச்சு

“அப்போது அவரிடம் தொலைபேசி இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்ததாக உடற்பயிற்சியாளர் கமலேஷ் ஜெய்னுக்கு அழைப்பு விடுத்தேன். கடந்த சில தினங்களாக ஸ்ரேயாஸிடம் பேசி வருகிறேன். அவர் எனக்கு பதிலளிக்கிறார். அவரால் தொலைபேசியில் பதில் கொடுக்க முடிந்தால் அவர் சீராக நன்றாக இருக்கிறார் என்பது அர்த்தமாகும். இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கப்போகிறார். இருப்பினும் அனைவருக்கும் அவர் பதில் கொடுப்பது நல்ல அறிகுறியாகும்” என்று கூறினார்.

Advertisement