“நான் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவன்” ஒரு தொடரோடு நீக்கியது ஏமாற்றம் – கருண் நாயர் பேச்சு

Karun Nair
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 579 ரன்களையும், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 46 ரன்களையும் குவித்துள்ளார். இந்திய அணிக்காக 2016 ஆம் ஆண்டே அறிமுகமாகி இருந்தாலும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது தான் மீண்டும் அவர் வாய்ப்பினை பெற்றார்.

நான் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவன் : கருண் நாயர்

ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த தவறிய அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக மீண்டும் அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது கடினமான விடயமாக மாறியுள்ளது. அதோடு அண்மையில் வெளியான இந்திய ஏ அணியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தேர்வுக்குழு நிராகரித்ததால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

அதோடு கருண் நாயரின் நீக்கம் குறித்து பேசியிருந்த அஜித் அகார்கர் கூறுகையில் : அவரிடம் இருந்து நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் அவர் போதிய ரன்களை குவிக்க தவறவிட்டார் என்பதை நேரடியாக தெரிவித்திருந்தார். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் அவர் கோவா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 14 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 174 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு பிறகு பேசிய அவர் “நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியுடையவன்” என்று பேசியுள்ளார். இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பிறகு நான் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : தன்னை வளர்த்து விட்ட இடத்தை மறக்காத ஜெய்ஸ்வால்.. பாராட்டுகளை பெற்றுவரும் அவரது செயல் – என்ன நடந்தது?

ஆனால் இங்கிலாந்து தொடர் நான் நினைத்த வழியில் செல்லவில்லை. அந்த ஒரு தொடரை விட அதிக வாய்ப்புகளுக்கு நான் தகுதியானவன் என்றும் நினைக்கிறேன். இந்திய அணிக்காக நான் மீண்டும் விளையாட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய இலக்கு என கருண் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement