இன்னும் 68 ரன்கள் தான்.. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

Kohli and Sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 2027 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் அவர் தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :

அப்படி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ள அவர் தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த விராட் கோலி நிச்சயம் அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியின் போது மிகச்சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இரண்டாவது போட்டி நடைபெறும் அடிலெய்டு மைதானத்தில் 5 சதம், 4 அரைசதம் என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து 975 ரன்கள் குவித்துள்ள அவர் தனக்கு ராசியான அந்த மைதானத்தில் ரன் குவிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கும் விராத் கோலி 68 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் முன்னாள் இந்திய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார்.

அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக தற்போது சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் 464 போட்டிகளில் விளையாடி 18,436 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 428 போட்டிகளில் விளையாடி 18,369 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒருநாள் போட்டிகளில் 14,181 ரன்களையும், டி20 போட்டிகளில் 4,188 ரன்களையும் அவர் குவித்துள்ளார். இந்நிலையில் நாளைய இரண்டாவது போட்டியில் மேலும் அவர் 68 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணி சார்பாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்திதிற்கு செல்வார்.

இதையும் படிங்க : காயத்தில் இருந்து மீண்ட ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புகிறார் – எந்த தொடரில் தெரியுமா?

அதேபோன்று நாளை போட்டியில் அவர் 25 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் அடிலெய்டு மைதானத்தில் மட்டும் 1000 சர்வதேச ரன்களை பூர்த்தி செய்த வீரராகவும் அவர் சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement