இந்தியாவிடம் அந்த 14 கோப்பை இருக்கு.. பாக் ஜெய்க்காத கோப்பையை எடுத்து போகட்டும் விடுங்க.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் ஆசிய கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அவருடைய கையில் பாகிஸ்தான் அணியினர் பரிசையும் மெடலையும் வாங்கிக் கொண்டனர்.

ஆனால் அவரது கையில் இந்தியா கோப்பையை வாங்காது என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணி மறுப்பு தெரிவித்தது. அதனால் அவமானத்துடன் வெளியேறிய நக்வி இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறது என்பதை பார்த்து பழி தீர்க்க ஆசியக் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார். மறுபுறம் வேறு யாருடைய கையிலாவது ஆசியக் கோப்பை கிடைக்கும் என்று இந்திய அணி 45 நிமிடம் வரை மைதானத்தில் காத்திருந்தது.

- Advertisement -

உண்மையான கோப்பை:

கடைசியில் இந்தியா வாங்க மறுத்ததால் கோப்பை கொடுக்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அசராத இந்திய அணி கோப்பையை வென்றது போல் கொண்டாடி நக்விக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் தமது தலைமையில் வெற்றியில் பங்காற்றிய 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தான் இந்தியா வென்ற உண்மையான ஆசியக் கோப்பை என்று கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

எனவே ஜெய்க்காத ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் எடுத்துச் செல்லட்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கியது முதல் சாம்பியன் அணி போராடி வென்ற கோப்பையை வாங்க மறுத்த நிகழ்வை பார்த்ததில்லை. செப்டம்பர் 4 முதல் இங்கே நன்றாக விளையாடிய நாங்கள் அடுத்தடுத்த 2 போட்டிகளில் அசத்தினோம்”

- Advertisement -

சூரியகுமார் கருத்து:

“அதனால் கோப்பையை வாங்க நாங்கள் தகுதியானவர்களாக கருதுகிறேன். அதைத் தவிர்த்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. கோப்பையைப் பற்றி பேசும் போது என்னுடைய கோப்பைகள் எங்கள் உடைமாற்றும் அறையில் இருக்கின்றன. என்னுடன் இருக்கும் 14 வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள் தான் உண்மையான கோப்பைகள். இந்த ஆசியக் கோப்பை முழுவதும் அசத்திய அவர்களுக்கு நான் பெரிய ரசிகன்”

இதையும் படிங்க: இந்தியா தான் கிரிக்கெட்டுக்கு அவமானம் செஞ்சுருக்காங்க.. எல்லாத்தையும் யார் ஸ்டார்ட் பண்ணா? சல்மான் விமர்சனம்

“இங்கே வந்து சிறப்பாக தயாராகி வெற்றிக்கு உதவிய அவர்கள் தான் உண்மையான கோப்பைகள். இங்கிருந்து அன்பான நினைவுகளை எடுத்துச் செல்வதே உண்மையில் சிறந்த தருணங்களாகும். இந்த வெற்றி முக்கியமானது. இப்போட்டி முடிந்ததும் பெரிய திரையில் 2025 ஆசியக் கோப்பை சாம்பியன் இந்தியா என்று எழுதப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை விட சிறந்தது என்ன இருக்க முடியும்? இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இத்தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement