ஆசிய கோப்பை இறுதிப்போட்டியானது மழையால் நின்றால் என்ன ஆகும்? ரூல்ஸ் கூறுவது என்ன? – விவரம் இதோ

IND vs PAK Rain
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்றிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்கி இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வர இருக்கிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இம்முறை 17-வது ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்று வருகிறது.

மழையால் இறுதிப்போட்டி ரத்தானால் என்ன நடக்கும்? :

அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்திருந்த அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றில் விளையாடி முடித்துவிட்டன. சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இன்று செப்டம்பர் 28-ஆம் தேதி விளையாட இருக்கின்றன.

- Advertisement -

அதன்படி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த போட்டியானது மழை காரணமாக பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் எந்த ஒரு போட்டியிலும் மழை ஒரு குறிக்கீடாக வரவில்லை. எந்த போட்டியும் மழையால் பாதிக்கப்படவும் இல்லை. அதேபோன்று இந்த இறுதிப் போட்டிக்கான வானிலை அறிக்கையிலும் மழை இல்லை என்பதே முடிவாக இருக்கிறது. ஆனாலும் ஒருவேளை மழையால் ஆட்டம் நின்றால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் போட்டி நாளான இன்று மழை பெய்தால் முதலில் ஓவர்களை குறைக்கும் முடிவிற்கு அம்பயர்கள் வருவார்கள். பின்னர் முற்றிலும் இன்று போட்டி நடத்த சாத்தியமே இல்லை என்று தெரிய வந்தால் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டு நாளை ரிசர்வ் டேவிற்கு மாற்றப்படும்.

இதையும் படிங்க : அபிமன்யு ஈஸ்வரனுக்கு வெ.இ தொடரில் இடம் கிடைக்காமல் போக அவரோட அப்பா தான் காரணம் – சீக்கா கருத்து

ஒருவேளை நாளைய ரிசர்வ் டே ஆட்டத்திலும் மழையால் போட்டி துவங்க முடியாமல் போனால் இந்த போட்டியானது ரத்து செய்யப்பட்டு ஆசிய கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ரூல்ஸ் கூறுகிறது. ஆனாலும் இந்த இறுதிப்போட்டி எந்தவொரு இடையூறுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதே உண்மை.

Advertisement