அபிமன்யு ஈஸ்வரனுக்கு வெ.இ தொடரில் இடம் கிடைக்காமல் போக அவரோட அப்பா தான் காரணம் – சீக்கா கருத்து

Cheeka and Abhimanyu Easwaran
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதியான இன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு நாடு திரும்பும் இந்திய அணியானது இன்னும் சில தினங்களில் அடுத்த தொடரில் விளையாட இருக்கிறது.

அபிமன்யு ஈஸ்வரனை நினைத்தால் பரிதாபமாக இருக்கு : கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

அதன்படி இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த அணியில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த உள்ளாட்டு தொடரில் துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் விவாதங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியுடன் பயணித்த அவருக்கு இதுவரை ஒரு அறிமுக வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை.

உள்நாட்டு தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய ஏ அணிக்காகவும் கேப்டனாக இருந்து வருவதால் அவருக்கு நிச்சயம் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த விடயம் பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு அபிமன்யு ஈஸ்வரனின் தந்தையும் இந்திய நிர்வாகத்தை சாடி சில கருத்துகளை பகிர்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி அபிமன்யு ஈஸ்வரன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறாமல் போனதற்கு அவர் தந்தை அளித்த சில கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது பரிதாபமாக இருக்கிறது. இங்கிலாந்து தொடர் முடிவடைந்த கையோடு அவரது தந்தை சில காட்டமான கருத்துக்களை தெரிவித்ததாலேயே அவரை அணியிலிருந்து நீக்கி இருக்கலாம். ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் கூடுதல் துவக்க வீரர் தேவையில்லை என்பதனாலே நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இன்னும் 2 விக்கெட் போதும்.. லாசித் மலிங்காவின் ஆல்டைம் சாதனையை தகர்க்க காத்திருக்கும் – குல்தீப் யாதவ்

அதேபோன்று கருண் நாயரை அணியிலிருந்து நீக்கியது தவறில்லை. ஏனெனில் இங்கிலாந்து தொடரில் அவர் தனது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதேவேளையில் தேவ்தத் படிக்கல் எப்படி மீண்டும் அணிக்கு திரும்பினார் என்றும் தெரியவில்லை என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement