அபிஷேக் சர்மாவிடம் இருக்கும் இந்த திறமைக்கு அவர் எங்கயோ போகப்போகிறார் – ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டு

Ashwin and Abhishek
- Advertisement -

துபாயில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை மிக எளிதாக எதிர்கொண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

அபிஷேக் சர்மாவை பாராட்டிய ரவிச்சந்திரன் அஷ்வின் :

பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கினை துரத்திய நிலையில் 18.5 ஓவர்களில் எல்லாம் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான அபிஷேக் சர்மா 74 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 39 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது பங்கிற்கு அபிஷேக் சர்மாவை பாராட்டி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் சர்மாவிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அவர் கவர் டிரைவாக உள்ளிருந்து வெளியில் அடித்தார். அவர் அடித்த மற்ற சிக்ஸர்களை பற்றி பலரும் பேச விரும்புவார்கள்.

- Advertisement -

ஆனால் அவரிடம் இருக்கும் நேர்த்தியான ஆட்டத்தை பற்றி மட்டுமே நான் பேச விரும்புகிறேன். அவரிடம் இருக்கும் ஒரே ஒரு பேட் ஸ்விங்கை வைத்துக்கொண்டு இப்படி அட்ஜஸ்ட் செய்து விளையாடுவதை பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அபிஷேக் ஷர்மாவிற்கு இதுதான் ஆரம்ப கட்டம். இனிவரும் தனது கரியரில் கிரிக்கெட் உலகத்தையே அவர் பிரமிக்க வைக்கப் போகிறார்.

இதையும் படிங்க : இதுதான் டர்னிங் பாயின்ட்.. பாக் அணியை வீழ்த்த காரணமே அவர் எடுத்த அந்த விக்கெட் தான் – இர்பான் பதான் கருத்து

நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அவரது எதிர்காலம் மிக நீண்ட ஒரு எதிர்காலமாக இருக்கப்போகிறது. யுவராஜ் சிங் தன்னை எப்படி ஒரு மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதை வெளிக்காட்டினாரோ அவரது பாரம்பரியத்தை அபிஷேக் ஷர்மா நிச்சயம் கொண்டு செல்வார் என அஸ்வின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement